அடிக்கடி toxic உறவுகளில் சிக்கிக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தங்களின் உணர்வுகளையும், சுக துக்கங்களையும் பகிர்ந்துக்கொள்வதற்கு நிச்சயம் உறவுகள் தேவை.
ஆனால் நாம் பெரும்பாலான நேரங்களில் நாம் வாழ்க்கை துணையாகவும் நண்பர்களாகவும் தேர்ந்தெடுக்கும் நபர்கள் உண்மையானவர்களாகவும், நம்மை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பதில்லை.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் அவர்களால் சரியாக உறவுகளை கண்டுப்பிடிக்கவே முடியாதாம்.
அப்படி வாழ்வில் அடிக்கடி நச்சு உறவுகளிடம் சிக்கி தவிக்கும் ராசியினர் யார் யார் எனவும் அதற்கான காரணம் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் காதல் விடயங்களிலும் நட்பு வட்டாரத்தை உருவாக்கிக்கொள்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்களின் ஆளுமை ஒருபுறம் தங்கள் துணையிடம் ஈர்க்கப்படுகிறது, மறுபுறம், அவர்கள் தங்கள் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
இவர்களின் இந்த இரட்டை குணம் காரணமாக இவர்களால் எந்த உறவுகளிடமும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கவே முடியாது.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் அன்பானவர்களாகவும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் இருப்பதுடன் அதிகமாக உரிமை எடுத்துக்கொள்வதால், அவர்களின் உறவு நச்சு உறவுகளில் முடிவடையும்.
இந்த ராசியினர் குழந்தை பருவ அதிர்ச்சிகளை அனுபவிக்க கூடும். அதனால் இவர்கள் உறவுகளிடத்தில் அதிகம் எதிர்ப்பார்ப்புகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் காதலில் விழும் போது தங்கள் துணையை நேசித்தால் போதும், அவர்கள் விரும்பும் வகையில் விதமாக மாற வேண்டும் என்று தவறாக நம்புகின்றனர் அதனால் இவர்களின் உறவுகள் நச்சு உறவுகளாக அமையலாம்.
துலாம்
துலாம் ராசியினர் காதல் மற்றும் திருமணத்தில் அதிகம் ஈடுப்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் வலுவான உறவுகளில் நன்றாக உணர்கிறார்கள்.
துலாம் ராசிக்காரர்கள் தனிமையைத் தவிர்க்கிறார்கள், தனியாக இருக்க விரும்புவதில்லை. இது பெரும்பாலும் தவறான கூட்டாளர்களுடன் ஈடுபட வழிவகுக்கிறது.
கூடுதலாக, இந்த ராசிக்காரர்கள் ஓரளவு மேலோட்டமானவர்களாகவும், நல்லவர்களை விட அழகானவர்கள், பணக்காரர்கள் அல்லது கவர்ச்சிகரமானவர்களால் கவரப்படுவார்கள் அதனால் அடிக்கடி நச்சு உறவுகளில் சிக்கி வேதனையை அனுபவிப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |