கணவனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் பெண் ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு காலகட்டத்தில், வாழ்க்கை துணை பற்றியும் எதிர்கால வாழ்ககை பற்றியும் அதிகம் சிந்திப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் திருமணத்தின் பின்னர் கனவருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் தேவதைகளாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசி பெண்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இவர்களுக்கு இயல்பாகவே ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் இருக்கும்.
இந்த ராசி பெண்களை திருமணம் செய்யும் ஆணுகள் திருமணத்திற்கு பின் பணக்காரராகும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
ரிஷப ராசி பெண்கள் இருக்கும் இடத்தில் பணத்துக்கும்,செல்வ செழிப்புக்கும் ஒருபோதும் பஞ்சமே இருக்காது.
கடகம்
கடக ராசியின் அதிபதியும் சுக்கிரன் என்பதால், இந்த ராசி பெண்கள் வாழ்க்கை முழுவதும் சொகுசாக வாழும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி பெண்கள் ஜாதகத்தில் வலுவான சந்திரனைக் கொண்டிருப்பதால், இவர்களை திருமணம் செய்யும் ஆண்கள், திருமணத்திற்கு பின் நிதி நிலையில் நல்ல உயர்வைக் காண்பார்கள்.இந்த பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்மாகவே மாற்றும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்
சூரியனின் ஆதிக்கத்தில் பிறப்பொடுத்த சிம்ம ராசி பெண்கள் இயல்பாகவே பணம் உட்பட அனைத்து செல்வங்களையும் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருபார்கள்.
இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் தங்களின் கடின உழைப்பால் நிறைய செல்வத்தை சம்பாதிப்பார்கள்.
எனவே இந்த சிம்ம ராசிக்கார பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் நிச்சயம் பொருளாதாரத்தில் உச்சத்தை தொடுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |