அதி புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்டையில் ஒருவர் பிறப்பெடுக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்ககை மற்றும் விசேட குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் பிறப்பிலேயே அதீத அறிவாற்றல் மற்றும் நுண்ணறிவு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இந்த விடயத்தையும் வித்தியாசமான கோணத்தில் இருந்து பார்க்கக்கூடியவர்களாகவும் விரைவாக கற்றுக்கொள்ளும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அப்படி அதி புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே வித்தியாசமாக சிந்திக்கும் குணம் கொண்டவர்களாகவும் லட்சிய வாதிகளாகவும் இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் லட்சியத்தை அடைவதற்காக அதிக அறிவாற்றலை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு உலகத்தை பற்றிய அறிவு மற்றும் மற்றவர்களின் உளவியழவை பற்றிய அறிவும் அதிகமாகவே இருக்கும்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு மிகவும் சாதாரனமாக தெரிந்தாலும் இயற்கையாகவே அதிக அறிவுடையவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே இவர்களின் இந்த குணம் தெரியும். இவர்கள் ஒரு விடயம் தொடர்பில் பல்வேறு விதமாக சிந்தித்து சிறந்த முடிவை எடுக்கும் ஆற்றலை நிச்சயம் கொண்டிருப்பார்கள்.
மற்றவர்கள் தீர்வு காண போராடும் விடயங்களையும் கூட இந்த ராசியினர் எளிமையாக தீர்த்து விடுவார்கள்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக மனஉறுதியும் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் மூளை எப்போதும் செயல்பாட்டுக் கொண்டே இருக்கும்,வித்தியாசமான கண்டுப்பிடிப்புகளை உருவாக்குபவர்கள் பெரும்பாலும் இந்த ராசியினராகத்ததான் இருப்பார்கள்.
இந்த ராசியினர் எப்போதும் தனித்துவமான திறமையால் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுப்பட்டவர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |