இந்த ராசி பெண்களின் கோபத்தை மட்டும் தூண்டிறாதீங்க... விளைவு ரொம்ப மோசமா இருக்கும்!
பொதுவாகவே ஆண்கள் உடலளவில் பெண்களை விட வலிமையானவர்களாக இருந்தாலும், மனவலிமை பெண்களுக்கே மிகவும் அதிகம்.
இயல்பில் பெண்கள் மென்மையானவர்களாக இருந்தாலும், அவர்களை எதிர்மறையாக தூண்டிவிட்டால் பெண் சிங்கமாக மாறிவிடுவார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே அதிகமான கோபத்துக்கும், மூர்க்கத்தனத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
இப்படி மற்றவர்களால் கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு கோபத்தை ஆபத்தான முறையில் வெளிப்படுத்தும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்

சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த கும்ப ராசி பெண்கள் வாழ்வில் நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
சுதந்திரமான மனப்பான்மை கொண்ட, அமைதியை விரும்பும் மற்றும் கனவு காணும் இயல்புடைய இவர்கள் தங்களின் ஆசைகளை கற்பனை செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
ஆனால் மற்றவர்கள் இவர்களுக்கு எதிராக தவறு செய்யும்போது இவர்களின் மூர்க்கத்தனமாக இயல்ப்பை வெளிப்படுத்துவார்கள். இவர்களின் கோபத்தை தூண்டிய பின்னர் இவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலானதாக இருக்கும்.
ரிஷபம்

அமைதி, ஆறுதல் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி பெண்கள் அவர்களின் வியக்க வைக்கும் அழகுக்கும், அதே நேரம் பிரம்பிக்க வைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு துரோகம் நடப்பதை அறிந்த பின்னர், அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தத் ஒரு போதும் தயங்க மாட்டார்கள். இவர்களின் கோபம் சாது மிரண்டதை போல் மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.
தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்தும் ரிஷப ராசியினரின் கோபத்தில் இருந்து தப்பிப்படுது நடக்காத காரியமாக இருக்கும். இவர்களின் காதல் எப்படி தனித்துவமானதாக இருக்குமோ, அதுபோல் இவர்களின் கோபமும் கட்டுக்கடங்காத வகையில் விசித்திரமாக இருக்கும்.
மீனம்

குழந்தைத்தனமான நடத்தையை கொண்டிருக்கும் மீன ராசிகாரர்கள் இயல்பாகவே மிகவும், மென்மையான இயல்பை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எப்போதும் மற்றவர்களின் மனநிலையை சொல்லாமலேயே புரிந்து நடக்கும் உன்னதமான ஆன்மாக்களாக இருப்பார்கள்.
ஆனால் இந்த ராசி பெண்கள் கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள் என்றால் எதிராலிக்கு வாழும் போதே நரகத்தை காண்பிக்காமல் ஓய மாட்டார்கள். இவர்களின் கோபம் ஆயிரம் யானைகள் இணைந்ததை போல் மிகவும் வலிமையானதாகவும் ஆபத்தை கணிக்க முடியாத வகையிலும் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |