இந்த ஆண்டில் உயர் பதவியை அடையப்போகும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?
ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, இந்த ஆண்டிலாவது நம் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும்.
ஜோதிடத்தின் படி, ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்துமே அந்நபரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளைப் பொறுத்தது என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள்.
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
இதற்கமைய குருபகவான் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார். இதன் பலனான 2024 ஆம் ஆண்டு முதல் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றார்களாம்.அந்த வகையில் தொழில் ரீதியாக தலைமை பதவி கிட்டப்போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
பிறரை வழிநடத்தக் கூடிய திறன் உங்களுக்கு இயற்கையிலேயே இருக்கின்ற காரணத்தினால் தலைமைத்துவம் பெற அதிக வாய்ப்பு உள்ளது உங்களுடைய தன்னம்பிக்கை மற்றும் இறக்கம் உங்களை சுற்றி உள்ளவர்களை உங்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்கும்.
சிலருடைய செயல்பாடுகளால் இந்த ஆண்டில் தலைமைப் பொறுப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என கூறப்படுகிறது.
மேஷம்
இந்த ராசியினருக்கு சாகச மனப்பான்மை இயல்பிலேயே உண்டு.அதன் காரணமாக மனம் தளராமல் அனைத்தையும் உறுதியோடு செயல்படுத்தக் கூடியவர்கள். எத்தனை தடைகள் வந்தாலும் அச்சம் கொள்ளாமல் அதனை வெற்றி காண்பீர்கள்.
உங்களோடு பயணிக்கும் அனைவரையும் மன தைரியத்தோடு ஆபத்துகளை எதிர்கொள்ளும் அளவிற்கு ஊக்குவிப்பீர்கள். அதன் காரணமாக உங்களுக்கு இந்த ஆண்டு புதிய முன்னேற்றம் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது.
மகரம்
ஒழுக்கமான மனநிலையோடு எப்போதும் செயல்பட விரும்புபவர்களில் நீங்களும் ஒருவர்.அது மற்றவர்களிடத்தில் உங்கள் பெயரில் நம்பிக்கையை அதிகப்படுத்தும்.
மிகப்பெரிய லட்சியமாக இருந்தாலும் அதிக கவனம் செலுத்தி, கடின உழைப்பை கொடுத்து வெற்றி காண்பீர்கள்
இந்த ஆண்டு உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய ஆண்டாக அமையும் என கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |