நீங்கள் இந்த ராசிக்காரர்களாக இருந்தால் கறுப்பு கைக்கடிகாரம் அணிய கூடாது: காரணம் என்ன?
அனேகமானோர் கைக்கடிகாரம் அணிந்தால் அது கறுப்பு நிறத்தில் அணிவது தான் வழக்கம். ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட ராசிக் காரர்கள் கருப்பு கைக்கடிகாரம் அணியக்கூடாது.
தீய கண்பார்வைகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக, மக்கள் பெரும்பாலும், தங்களது கழுத்து, கை, கால் ஆகியவற்றில் கருப்பு கயிறு கட்டிக் கொள்கிறார்கள்.
ஒரு சிலர் வெளியில் செல்லும்போது, கருப்பு மையை கால் அல்லது தலை ஆகியவற்றில் தடவிச் செல்கின்றனர். இது தீய சக்திகள் நம்மை நெருங்காது என்று நம்புகிறார்கள். இது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
கறுப்பு கைக்கடிகாரம்
கறுப்பு பொருட்கள் எதுவாக இருந்தாலும் அது சனிபகவானின் தொடர்பு இருக்கும். இது ஜாதகத்தில் சனி வலுவாக உள்ளவர்களுக்கு கருப்பு உடைகள், கருப்பு கயிறு ஆகியவை சுப பலன்களை தரும்.
சில ராசியினர் இந்த கறுப்பு கைக்கடிகாரம் அணிவது நல்லது அல்ல. மேஷத்தை ஆளும் கிரகம் செவ்வாய். செவ்வாய்க்கும், சனிக்கும் பகை உண்டு. எனவே, கருப்பு நிறக் கயிறு மேஷ ராசியை கொண்டவர்களுக்கு தீமையை விளைவிக்கும்.
இதனால், வாழ்க்கையில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படும். எனவே, இந்த ராசிக்காரர்கள் கருப்பு நிற உடைகள் மற்றும் கருப்பு பட்டி வாட்ச் அணியக் கூடாது. இது போல தான் விருட்சிக ராசிக்காரர்கள் கறுப்பை பயன்படுத்த கூடாது.
இந்த தவறை அவர்கள் செய்வது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். கருப்பு கைக்கடிகாரங்களும் அவர்களுக்கு துரதிருஷ்டமானவை. எனவே, முடிந்தவரை கருப்பு உடைகள் உள்ளிட்டவற்றை அணிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எனவே கறுப்பு நிறத்தை அணிபவர்கள் ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |