இந்த ராசியில் பிறந்தவங்க கோழைகளாக இருப்பார்களாம்: உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் அவர்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப தனித்துவமானவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் கிரக நிலையை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட சில ராசிகள் அவற்றின் துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். மாறாக சில ராசிகளில் பிறந்தவர்கள் இதற்கு முற்றிலும் எதிர்மறையாக இருப்பார்கள்.
எப்போதும் எதையாவது ஒரு விடயத்தை நினைத்து பயம் கொள்வார்கள். இது போன்று இருப்பவர்களை சிலர் கோழைத்தனம் கொண்டவர்கள் என அழைப்பார்கள்.
அந்த வகையில், எந்தெந்த ராசிக்காரர்கள் பெரிய கோழையாக இருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
கடகம் | கடகம் ராசியில் பிறந்தவர்கள் சந்திரனால் ஆளப்படுவார்கள். ஆழ்ந்த உணர்திறன் மற்றும் எளிதில் உணர்ச்சிரீதியாக பாதிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் தங்களின் அன்பை மற்றவர்களுக்கு காட்ட நினைப்பதால் ஏமாற்றங்கள் அதிகம் சந்திப்பார்கள். மோதல்களில் இருந்து விலகி இருப்பார்கள். இதனால் மற்றவர்கள் இவர்களை கோழையாக பார்ப்பார்கள். |
மீனம் | மீன ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் சொந்த உலகத்தில் வாழ்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். கடுமையான வாழ்க்கையின் யதார்த்தத்தை பார்த்தும் பயம் கொள்வார்கள். அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் விரும்பத்தகாத சூழ்நிலைகளைத் தவிர்க்க முடியாமல் கோழைத்தனமாக பயம் ஒழிந்துக் கொள்வார்கள். |
துலாம் | சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்காரர்கள், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நல்லிணக்கத்தையும், சமநிலையையும் கொண்டு நடக்க வேண்டும் என ஆசைக் கொள்வார்கள். அமைதியை காப்பார்கள். விருப்பத்திற்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இருந்தாலும் மோதல்களில் கலந்து கொள்ளமாட்டார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).