இந்த ராசி ஆண்களிடம் ஜாக்கிரதையா இருங்க! பெண்களை ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
குறிப்பாக, அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் மற்றும் திருமண வாழ்க்கை மட்டுமின்றி, அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறையான குணநலன்களிலும் ராசி மற்றும் நட்சத்திரத்தின் தாக்கம் இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே பெண்கள் மீதும் காதல் மீதும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும், இவர்கள் தங்களின் காதல் உறவுகளில் நேர்மையாக இல்லாமல், துணையை ஏமாற்றும் அல்லது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறவுகளைத் தொடரும் மனப்பான்மை கொண்டிருக்ப்பார்கள் என்றும் கணிக்கபபட்டுள்ளது.
அப்படி காதல் என்ற பெயரில் பெண்களை அதிகம் ஏமாற்றும் குணம் கொண்டவர்களாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செயல் மற்றும் போரின் கிரகமான செவ்வாய். இவர்கள் இயல்பிலேயே துணிச்சலும், ஆர்வமும், உத்வேகமும் கொண்டவர்கள்.
உறவுகளில் தீவிரமாக ஈடுபட்டாலும், விரைவில் பொறுமையிழக்கவோ சலிப்படையவோ வாய்ப்புள்ளது. சவால்களையும் புதிய அனுபவங்களையும் விரும்புவதால், ஒரே பெண்ணிடம் நிலையான விசுவாசத்துடன் இருப்பது இவர்களுக்கு கடினம்.
ஆனால் இவர்கள் ஒருவரை உண்மையாக நேசிக்கும்போது, அவர்களின் காதலும் ஈடுபாடும் தீவிரமாக இருக்கும். இவர்களுக்கு எளிதில் சளிப்படையும் குணம் இருப்பதால் இவர்கள் பல பெண்களை விரும்ப அதிக வாய்ப்பு காணப்படும்.
மிதுனம்

மிதுன ராசியின் அதிபதி கிரகங்களின் இளவரசரான புதன். இவர்கள் ஆர்வமுள்ளவர்களாகவும், துடிப்பானவர்களாகவும், மாற்றத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.
புதிய இடங்கள் மற்றும் மனிதர்களைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டதால், ஒரே பெண்ணுடன் நிலைத்து வாழ்வது சில நேரங்களில் கடினமாகலாம்.
எப்போதும் புதுப்புது அனுபவங்களைத் தேடுவதால், எளிதில் சலிப்படையக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இதனால் ஒரே துணைக்கு விசுவாசமாக இருப்பது கடினம்.
தனுசு

தனுசு ராசியின் அதிபதி முன்னேற்றம் மற்றும் சாகசத்தின் கிரகமான குருபகவான். இவர்கள் சுதந்திரத்தையும் புதிய அனுபவங்களையும் அதிகம் விரும்புவார்கள்.
புதிய இடங்கள், யோசனைகள் மற்றும் மனிதர்களை ஆராய்வதில் ஆர்வம் கொண்டதால், ஒரே பெண்ணுடன் முழுமையாகத் திருப்தி அடைவது சில நேரங்களில் கடினமாகலாம்.
தங்களின் சுதந்திரத்தைப் புரிந்துகொள்ளும் துணையை விரும்புவார்கள். உறவில் கட்டுப்பட்டதாக உணர்ந்தால், அதிலிருந்து விலகிவிடும் மனநிலை ஏற்படலாம்.
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் வசீகரமானவர்கள், காதல் உணர்வு கொண்டவர்கள் மற்றும் சமூகத்தில் எளிதில் பழகக்கூடியவர்கள்.
புதிய நபர்களைச் சந்திப்பதையும், காதல் வாழ்க்கையை ரசிப்பதையும் விரும்புவார்கள். இதனால் சில நேரங்களில் பல உறவுகளுக்கு இடையில் ஊசலாடக்கூடும்.
உறவுகளில் நல்லிணக்கத்தை விரும்பினாலும், ஒரே ஒரு பெண்ணிடம் மட்டும் நிலைத்திருப்பது அவர்களுக்கு சவாலாக இருக்கலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |