100 வயது வரை வாழும் அதிர்ஷ்டம் கொண்ட ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்சியாகவும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் இவ்வாறான வாய்ப்பு வெகு சிலருக்கே அமைகின்றது. குறிப்பாக ஆரோக்கியமாக வாழ்க்கையின் இறுதி வரை இருப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே.
ஜோதிட சாஸ்திஜரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை, ஆயுள் காலம் உட்பட பல்வேறு விடயங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழும் யோகம் பெற்றவர்கள். அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பதால், நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் ஒழுக்கம் மற்றும் சமூகத்தில் நடந்துக்கொள்ளும் விதம் போன்றன இவர்களை மற்றவர்களிடமிருத்து வித்தியாசமாக காட்டுகின்றது.
இவர்கள் உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கவழக்கங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பவர்களாக இருப்பார்கள். அது அவர்களிள் ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் காரணமாக அமைகின்றது.
கடகம்
சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள் இயல்பாகவே கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் அமைதியானவர்களாகவும் இருப்பார்கள்.
மற்றவர்கள் மீதான அவர்களின் அன்பு இவர்களின் மனநிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதால், இவர்கள் உடல் நிலையும் சீராக இருக்கும்.
இவர்களின் விசேட குணங்கள் மற்றம் வாழ்ககை முறை பழக்கங்கள் என்பன இவர்களை மகிழ்சியாக நீண்ட ஆயுளுடன் வாழ வைக்கின்றது.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் புத்திக்கூர்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேல் ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் இந்த ராசியினர் நீண்ட ஆயுள் பெற்றவர்களானவும் வாழ்வில் நீண்ட காலம் இளமையை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |