வயதான பின்னரே வாழ்க்கை துணையை தேடும் ராசிகள்... ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் முக்கியமான ஒரு அங்கமாக இருக்கும்.இளமை பருவத்தில் திருமண ஆசை இல்லாதவர்கள் மிகவும் அரிது.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிட்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிற்தவர்கள் இளமையில் திருமணத்தை விட பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வயதான பின்னரே திருமணத்தை பற்றி யோசிப்பார்களாம்.
அப்படி திருமண வயது கடந்த பின்னர் வாழ்க்கை துணையை தேடும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகரம் ராசியில் பிறந்தவர்கள் தங்களின் ஒழுக்கத்திற்கும், அர்ப்பணிப்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் இளமையிலேயே குடும்ப பொறுப்புக்களை சுமக்கும் குணத்தை கொண்டுள்ளனர்.
இவர்கள் கர்மாவிற்கு பதில் கொடுக்கும் கிரகமான சனிபகவானால் ஆளப்படுகிறார்கள், இது கட்டுப்பாடுகள், தாமதங்கள் மற்றும் பொறுப்புடன் தொடர்புடையதாகவே இருக்கும்.
இவர்கள் தங்களின் பொறுப்புளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதிலேயே பாதி வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நிலை ஏற்படும். இதனால் அவர்களின் திருமணம் தாமதமாகவே நிகழும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சிறந்த வாழ்க்கைத்துணையாக இருப்பார்கள். ஆனால் இவர்களின் சுதந்திர தாகம் வாழ்வில் பாதி நாட்களை தனிமையிலேயே கடத்துவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
தனிப்பட்ட சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், இவர்கள் திருமண வாழ்க்கையில் இணைவதற்கு நீண்ட காலம் எடுக்கும்.
திருமண வாழ்க்கை இவர்களுக்கு அதிக கட்டுப்பாடுகளையும் பொறுப்புகளையும் கொடுக்கும் என்று இவர்கள் நம்புகின்றார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எல்லா விடயங்களிவும் அதிக நேர்த்தியையும் முழுமையையும் எதிர்ப்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மகர ராசிக்காரர்களைப் போலவே, கன்னி ராசிக்காரர்களும் நம்பகமான கூட்டாளிகளாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கு உறுதியளிக்க வேண்டும் என்ற நிலையில் ஒருவித அச்சம் ஏற்படுகின்றது.
இவர்களின் இந்த பயம் காரணமாகவே இளமை பருவம் முழுவதையும் வீணடித்துவி்டுகின்றார்கள். இந்த ராசியினரின் திருமணம் பெரும்பாலும் தாமதமாகத்தான் நடக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |