தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
பொதுவாக புதுவருட பிறப்பு என்றாலே அனைவருக்கும் ராசி பலன்களை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.
வழிபாடுகளின் மீது ஆர்வம் அற்றவர்கள் கூட தங்களுக்கு வருட பிறப்பு எப்படியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை தெரிந்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.
கிரக நிலைகளின் பிரகாரம் புது வருட பிறப்பு சில ராசிகளுக்கு சாதக பலன்களையும் சில ராசியினருக்கு பாதக பலன்களையும் கொடுக்கும்.
அந்த வகையில் பிறந்துள்ள தமிழ் புத்தாண்டில் ராஜயோகத்தை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கைக்கும் மனஉறுதிக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
கிடைக்கும் ஒவ்வொரு சிறிய வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக்கொண்டு முன்னேறும் திறன் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இந்த புத்தாண்டில் மேஷ ராசி வியாபாரிகளுக்கு சூரிய பகவானின் ஆசியால் தொழிலில் எதிர்பாராதளவு முன்னேற்றம் ஏற்படப்போகிறது.
இவர்கள் இந்த ஆண்டில் முதலீடுகள் மற்றும் நிதித் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். சிறியளவு உழைப்பிலேயே பெரிய வெற்றியை தனதாக்கிக்கொள்ளும் சந்தர்ப்பம் அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த தமிழ் புத்தாண்டு இவர்களுக்கு நிதி ரீதியில் சிறந்த முன்னேற்றத்தை கொடுக்கும்.
இவர்களின் நீண்ட நாள் கனவுகளை அடைவதற்கான முயச்சிகளில் தீவிரமாக ஈடுபடுவார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கூடிவரும்.
இவர்கள் பிறப்பிலேயே பணத்தை நிர்வகிப்பதில் திறமையானவர்களாக இருப்பார்கள்.இவர்கள் தங்களின் சேமிப்புகளையும் முதலீடுகளையும் கவனமாக நிர்வகித்து இந்த ஆண்டில் சொத்துக்களை அதிகரிக்கும் வாய்பு காணப்படுகின்றது.
சிம்மம்
சூரிய பகவானின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த சி்ம்ம ராசியினர் இயல்பாகவே தலைமை வகிப்பதில் தேர்ச்சிபெற்றவர்களாக இருப்பார்கள்.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இந்த ஆண்டு பண ரீதியில் செழிப்பான நிலையை அனுபவிப்பார்கள்.இவர்களுக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் அமையும்.
படைப்பாற்றலுடன் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த ஆண்டு அபரிமிதமான வெற்றியை கொடுக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |