நவம்பர் 2025: நரகவேதனையை அனுபவிக்க போகும் 3 ராசியினர்... ஜாக்கிறதையா இருங்க!
வேத ஜோதிடத்தின் பிரகாரம் கிரக நிலைகளுக்கும் ராசிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அதாவது கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் இந்த நவம்பர் மாதம் நிகழும் கிரக பெயர்ச்சிகள் மற்றம் ராசிகளின் நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகள் பெரும் சிக்கல்களை அனுபவிக்க நேரிடும்.

அப்படி நவம்பர் மாத ராசி பலன் கணிப்பின் பிரகாரம் அதிகளவில் பாதக பலன்களை அனுபவிக்க போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் காதல் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள், ஆனால் கிரக நிலைகளை பொருத்தமட்டில் இந்த மாதம் இவர்களுக்கு சில விடயங்களில் ஏமாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை என பல பக்கங்களிலிருந்தும் இவர்களுக்கு சிக்கல்கள் ஏற்ப்படும் நிலை காணப்படுகின்றது. இந்த மாதம் உடல் சார்ந்த பிரச்சிகைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
எனவே அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியதும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டியதும் அவசியமாகின்றது.
கன்னி

கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் கன்னி ராசியினர் எதிலும் முழுமையையும், நேர்த்தியையும் எதிர்ப்பார்ப்பவர்களாக இருப்பார்கள்.
நவம்பர் மாதம் கிரகங்களின் பெயர்ச்சிகளால் இந்த ராசியினர் தங்கள் தொழில் வாழ்க்கையில் சில பிரச்சனைகளையும் தடைகளையும் சந்திக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
வேலை தேடுபவர்களுக்கும் இந்த காலகட்டம் அதிக சவால்கள் மற்றும் ஏமாற்றங்கள் நிறைந்த மாதமாக இருக்கப்போகின்றது. இந்த மாதம் முழுவதும் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருக்கும் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
கடகம்

சந்திரனால் ஆளப்படும் கடக ராசியினர் இயல்பாகவே மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இந்த மாதம் மனதளவில் வேதனைப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இந்த மாதம் முழுவதும் இவர்களின் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலுமே சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
கடக ராசியகாதல் வாழ்க்கை அல்லது திருமண வாழ்க்கையில் தவறான புரிதல்கள் ஏற்படலாம், இதனால் அவர்கள் தங்கள் துணையை பிரியும் நிலையும் ஏற்படகூடும் என்பதால், உறவுகளிடத்தில் கோபத்தை குறைத்து பக்குவமாக நடந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |