யார் மீதும் அக்கறையற்ற ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் பார்த்து பழகுங்க
பொதுவாகவே உலகில் மனிதர்களாக பிறந்த அனைவரும் தங்கள் மீது மற்றவர்கள் அன்பு செலுத்த வேண்டும் என்றும், அக்கறையுடன் பழக வேண்டும் என்றும் நினைப்பது வழக்கம்.
ஆனால் நாம் மற்றவர்கள் மீது எந்தளவுக்கு அக்கறை செலுத்துகின்றோம் என நினைப்பவர்கள் மிக மிக அரிது.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே உறவுகள் மீதும், மற்றவர்கள் குறித்தும் அக்கறையற்றவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் தங்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தனித்துவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பார்ப்பதற்கு அனைவருடனும் நன்றாக பழகினாலும், மனதளவில் அவர்கள் எப்போதும் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் தங்களின் விருப்பங்களை ரகசியமாக வைத்துக்கொள்வதில் கில்லாடிகள்.
அதே சமயம் மற்றவர்களின் உணர்வுகள் மற்றம் விருப்பங்கள் பற்றிய அக்கறையின்றி தாங்கள் சொல்வதும, செய்வதும் மட்டுமே சரியானது என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் தங்களின் உறவுகளை விட தங்கள் தனிப்பட்ட நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் சுயநல குணம் வலுவாக இருப்பதால், மற்றவர்களின் தேவைகள் மற்றும் கருத்துக்களின் மீது இவர்கள் ஒருபோதும் அக்கறையற்றவர்களாக இருப்பார்கள்.
உண்மையில் தங்கள் வாழ்க்கையில் மற்றவர்களின் இருப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் அவர்களின் விருப்பங்களுக்கு மிதிப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நிச்சயம் கோட்டைவிட்டுவிடுவார்கள்.
தனுசு
குருபகவானால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள் சாகசம் இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் புதிய விஷயங்களை கற்றுகொள்வதற்தில் எப்போதும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் சுதந்திரத்தை பாதுக்காக்க வேண்டும் என்ற நோக்கில் உறுதியாக இருப்பதால், எந்த உறவிலும் பொறுப்புணர்ச்சியுடன் இருக்கமாட்டார்கள். யார் மீதும் அக்கறை காட்டவும் மாட்டார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |