தங்களை தாங்களே செதுக்கிக்கொள்ளும் 3 ராசியினர்: இவர்களை கண்டு விதியே அஞ்சும்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை நிர்னயம் செய்யும் ஆற்றலை கொண்டிக்கும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அதன் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசியின் தாக்கமானது அவர்களின் பொருளாதாரம், விதி, காதல், கல்வி, விடேச ஆளுமைகள், தோற்றம் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் பிரதிபலிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்களின் தலையெழுத்தையே தங்களின் அபாரா மனவலிமை மற்றும் திறமைகளால் மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி விதி எப்படியிருந்தாலும், தங்களின் வாழ்க்கையை தாங்களாகவே செதுக்கிக்கொள்ளும் சக்திவாய்ந்த முக்கிய மூன்று ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலான மற்றும் சாகச குணத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
சூழ்நிலை எந்தளவுக்கு மோசமானதாக இருந்தாலும், இவர்கள் தங்களால் முடிந்தவரை முயற்ச்சி செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தங்கள் விதிக்கு தாங்களே பொறுப்பு என்ற எண்ணத்தில் இவர்கள் உறுதியாக இருப்பார்கள். காரியங்களைச் சாதிக்கும் திறன் மற்ற ராசியினருடன் ஒப்பிடுகையில், இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
சிம்மம்

கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் அதீத தன்னம்பிக்கைக்கும் மன வலிமைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் செய்யும் ஒவ்வொரு விடயங்களிலும் மிகுந்த கவனம் செலுத்துவார்கள்.
தன்னம்பிக்கை கொண்டவர்கள், எப்போதும் தலைமைப் பொறுப்பில் இருக்க விரும்புவார்கள். தவறுகளை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு மத்தியில், தங்களின் தவறுகளை தாங்களே ஆராய்ந்து திருத்திக்கொள்ளும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்களை மற்றவர்களிடமிருந்து பிரகாசமாகவும் தனித்து நிற்கவும் எப்போதும் தயாராக இருப்பதால், விதியை பற்றிய கவலையின்றி, இலக்குகனை அடைய கடினமான உழைப்பார்கள்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் தீவிரமான மற்றும் மர்மமான குணத்துக்கும் ரகசியம் காக்கும் தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில், தாங்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.
தங்களின் தனிப்பட்ட கவலைகளையும், கஷ்டங்களையும் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்பாதவர்களாக இருப்பார்கள். ஆனால் தனிமையில் இலக்குகளை அடைய உறுதியுடன் போராடுவாரகள்.
விதியே அஞ்சும் அளவுக்கு தங்களின் கனவுகளை அடைய கடுமையாக போராடும் குணத்தை கொண்டிருப்பார்கள். இவர்கள் நினைத்ததை அடையும் வரையில் ஓயவே மாட்டார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |