ஜோதிடப்படி காதலில் நச்சுத்தன்மை கொண்ட டாப் 4 ராசிகள்! இவர்களிடம் ஜாக்கிரதை
பொதுவாகவே உறவுகளைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் தனித்துவமான குணநலன்களும், அணுகுமுறைகளும் இருப்பதால், அவர்களின் காதல் வாழ்க்கையும் வெவ்வேறு விதமாக அமைகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், சில ராசிகளில் பிறந்தவர்கள் காதல் உறவுகளில் மிகவும் அன்பாகவும், அக்கறையுடனும், உணர்வுப்பூர்வமாகவும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

அதேபோல், சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்களது காதல் உறவில் அதிகமாக ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும், தங்களது விருப்பங்களுக்கே முக்கியத்துவம் அளிப்பவர்களாகவும் இருப்பார்கள்என்றும் ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது.
இதுபோன்ற குணங்கள் சில நேரங்களில் துணைக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும், உறவில் நச்சுத்தன்மையான சூழலை உருவாக்கக்கூடியதாகவும் இருக்கலாம். அப்படி காதல் உறவில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் குணம் கொண்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்

போரின் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசியினர் துடிப்பும் உணர்ச்சிவசப்பட்ட இயல்பும் கொண்டவர்கள். எளிதில் கோபப்படுவதுடன், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமப்படலாம்.
இதனால் உறவுகளில் சுயநலமாகச் செயல்பட்டு, துணையின் தேவைகளைவிட தங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வாய்ப்புள்ளது. இது மோதல்களையும் மனக்கசப்பையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மிதுனம்

கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் மிதுன ராசியினர் தங்கள் இரட்டை இயல்புக்குப் பெயர் பெற்றவர்கள். இதனால் முடிவெடுப்பதில் தடுமாற்றமும் அடிக்கடி மனநிலை மாற்றங்களும் ஏற்படும்.
அவர்களின் நிலையற்ற மனநிலையைப் புரிந்துகொள்வது துணைக்கு சிரமமாக இருப்பதால், உறவில் குழப்பமும் விரக்தியும் ஏற்படக்கூடும். மேலும், பிறரைத் தங்கள் விருப்பப்படி கையாளும் போக்கும் உறவில் பிரச்சினைகளை உருவாக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் தீவிரமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான இயல்பைக் கொண்டவர்கள். அவர்களின் பொறாமை மற்றும் அதிகப்படியான பாதுகாப்பு உணர்வு, துணையைக் கட்டுப்படுத்தும் அல்லது சந்தேகிக்கும் போக்கை ஏற்படும்.
மேலும், மனக்கசப்பை நீண்ட காலம் வைத்துக்கொள்வதும் பழிவாங்கும் எண்ணமும் உறவைப் பாதிக்கக்கூடும். இவர்கள் எதிலும் ரகசியம் காக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இதுவும் உறவை பாதிக்க கூடும்.
கடகம்

கடக ராசியினர் மென்மையான மற்றும் அன்புடன் பராமரிக்கும் குணம் கொண்டவர்கள்.ஆனால், அவர்களின் மனநிலை மாற்றங்களும் துணையை அதிகம் சார்ந்திருக்கும் போக்கும் உறவில் சுமையை ஏற்படுத்தலாம்.
அதிருப்தியை வெளிப்படுத்துவதுடன், கடந்தகாலக் காயங்களை மனதில் வைத்துக்கொள்ளும் தன்மையும் உறவில் நச்சுத்தன்மையான சூழலை உருவாக்கக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |