இந்த ராசிகள் தான் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபாடு கொண்டவர்களாம்... ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி திருமண உறவில் பொரும்பாலும் எதிர்பார்பது உண்மையான அன்பையும் நம்பிக்கையும் தான்.
திருமண உறவில் துணையிடம் நேர்மையை எதிர்பார்ப்பது எந்தளவுக்கு முக்கியமோ, நாமும் நேர்மையாக நடந்துக்கொள்ள வேண்டியதும் அதே அளவுக்கு முக்கியம் தான்.

ஆனால் ஜோதிட சாஸ்திர கணிப்புகளின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் திருமணத்தை மீறிய உறவில் ஈடுப்பட அதிக வாய்ப்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அப்படி திருமணத்தை மீறிய உறவை தேடும் ராசியினர் யார் யார் என்பது குறித்தும் அதற்கான முக்கிய காரணங்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் உணர்வுகளை விடவும் யதார்த்தமான நடைமுறைக்கு அதிக முக்கியத்துவத் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்த பின்னரே அதிக ஆர்வத்துடன் தங்களின் இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பிக்கின்றார்கள். இதனால் துணையுடன் நேரம் செலவிடுவது முற்றிலும் குறைந்துவிடும்.
அதிக நேரத்தை தங்களின் தொழில் வளர்ச்சிக்கான மட்டுமே செலவிடும் போது அந்த சூழலில் உள்ள ஒரு நபரை துணையாக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் பிறப்பிலேயே இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களை வாழ்க்கை துணையிடம் கூட பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.
இவர்களின் இந்த குணம் திருமண வாழ்க்கையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதற்கு மிகப்பெரும் தடையாக இருக்கும். இதுவும் இவர்கள் திருமணத்தை மீறிய உறவில் சிக்கிக்கொள்ள காரணமாக இருக்கும்.
இவர்கள் எப்போதும் வழக்கமான உணர்வுகளை விடவும் சுவராஸ்யமான அனுபவங்களை விரும்புபவர்களாக இருப்பதால், திருமண வாழ்க்கை இவர்களுக்கு விரைவில் சலிப்பை ஏற்படுத்துகின்றது. அதனாலும் புதிய துணை மீது நாட்டம் ஏற்படுகின்றது.
துலாம்

ராசிக்காரர்கள் அவர்களின் தங்களின் தத்திரமான குணத்துக்கும் அதே சமயம் குழப்பமான மனநிலைக்கும் பெயர்பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த தனித்துவ இயல்பு தந்திரமாக சிந்தித்து புதிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும், திருமண உறவில் குழப்பமான நிலையை உருவாக்கவும் முக்கிய காரணமாக இருக்கும்.
புதிய அனுபவங்களை பெறுவதில் இவர்களுக்கு இருக்கும் அதீத ஆர்வம், சில சமயங்களில் அவர்களை உணர்வுபூர்வமாகவோ அல்லது காதல் ரீதியாகவோ ஒன்றுக்கும் மேற்பட்ட துணையை ஏற்படுத்திக்கொள்ள வழிகோலும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |