இந்த ராசியினர் குழந்தைகள் போல் குறும்பு தனம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுவா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை நிதி நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில், அதிகளில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியினர், இயல்பாகவே மிகவும் குறும்புத்தனம் கொண்டவர்களாகவும், வாழ்க்கை பற்றி அதிகம் குழப்பிக்கொள்ளாதவர்களாகவும் இருப்பார்கள்.
இப்படி எந்த சூழ்நிலையிலும் குழந்தை போல் மகிழ்ச்சியாக குறும் செய்யும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் தங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விடயங்களில் அதிகம் சிந்திக்காமல் விளையாட்டு தனமாக இறங்கிவிட்டு பின்னர் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள்.
இவர்களிள் மிகவும் குழந்தைத்தனமான குணம் கொண்டவர்களாகவும், எதிலும் பெரிதாக சிந்தித்து குழப்பிக்கொள்ளும் குணம் அற்றவர்களாகவும் இருப்பார்கள்.
முதிர்ந்த நபர் எளிதில் புறக்கணிக்கக்கூடிய விஷயங்களில் இவர்களுக்கு அளவுக்கு அதிகமாக ஈடுபாடு காணப்படும். இவர்கள் மற்றவர்களின் பார்வையில் அதிக விளையாட்டுத்தனம் கொண்டவர்களாக தோன்றுவார்கள்.
தனுசு
குழந்தைத்தனமான மற்றும் முதிர்ச்சியற்ற ராசிகளில் தனுசு ராசிக்காரர்கள் முக்கிய இடம் வகிக்கின்றார்கள்.
சாகச குணம் மற்றும் குறும்புத்தனத்துக்கு பெயர் பெற்ற இவர்கள் பொறுப்புகளில் சிக்கிக்கொள்வதை ஒருபோதும் விரும்பவே மாட்டார்கள்.
இவர்கள் உடனடியாக எரிச்சலடையக்கூடும், மேலும் இரண்டாவது நிமிடத்தில் ஒரு சிறிய பொம்மையைப் பார்த்து கண்களில் கண்ணீருடன் சிரிக்கும் குழந்தையைப் போல மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
கடகம்
கடக ராசியினர் அமைதியற்றவர்களாகவும் பொறுமையற்றவர்களாகவும், ஒரு குழந்தையைப் போல விரைவாக பதிலளிக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
ஒரு குழந்தை சில நேரங்களில் எந்த காரணமும் இல்லாமல் நேசிக்கிறது மற்றும் வெறுக்கிறது. அதேபோல், இவர்களும் குறிப்பிட்ட காரணம் இல்லாமல் தங்களின் முடிவுகளை மாற்றிக்கொள்ளும் குணம் கொண்டவர்கள்.
மற்றவர்களுக்கு மிகுந்த வலி கொடுக்கும் விடயம் இவர்கள் பார்வையில் மிகவும் சாதாரணமானதாக தோன்றலாம். இவர்களின் குறும்புதனம் இவர்களின் மிகப்பெரும் நேர்மறை சக்தியாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
