அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கையற்ற ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், விசேட திறமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்களின் திறமையின் மீதும் உழைப்பின் மீதும் அதீத நம்பிக்கை கொண்டவர்களாகவும், அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை மற்றும் ஈடுபாடு அற்றவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
சூரியனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த மேஷ ராசியினர் இயல்பாகவே தங்களின் தலைமைத்துவ குணங்களுக்கும், உழைப்புக்கும் பெயர் பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் அதிர்ஷ்டத்தை நம்பாமல், தங்கள் முயற்சியிலும் திறமையிலும் மட்டுமே நம்பிக்கை கொண்டு வாழ்வில் வெற்றிகளை குவிப்பார்கள்.
ஆனால் இவர்களுக்கு நம்பிக்கையில்லை என்றாலும், இவர்களின் அதிர்ஷ்டம் இவர்களை குறைந்த முயற்ச்சியிலேயே புகழ் மற்றும் பொருளாதார ரீதியில் உச்சத்துக்கு கொண்டு செல்லும்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் அடிப்படையிலேயே நேர்த்திக்கும் முழுமைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் திட்டமிட்ட முயற்சி, புத்திசாலித்தனம், பகுத்தறிவு ஆகியன மற்றவர்களை விடவும் சற்று அதிகமாக இருக்கும். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் மீது பெருமளவில் நம்பிக்கை இருக்காது.
இந்த ராசியினர் கல்வி, தொழில் மற்றும் வியாபாரத்தில் தங்கள் திறமையால் மட்டுமே முன்னேற முடியும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் அதிர்ஷ்டத்தை நம்பாமல், தங்கள் முயற்சி மற்றும் திட்டமிடல் மூலம் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் செய்யும் வினைக்கு காலம் நிச்சயம் தக்க பலனை கொடுத்தே தீரும் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டிருப்பதால், அதிர்ஷ்டம் குறித்து சிற்திக்கவே மாட்டார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |