இந்த ராசியினர் பணத்தை தன்வசப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுவா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே பணத்தை தன்வசப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாகவும், கையில் இருக்கும் கொஞ்ச பணத்தை பல மடங்காக பெருக்கும் கலை அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்.
அப்படி பணம் குறித்த சகல வித்தைகளையும் அறிந்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
பொறுமையாக செல்வத்தை உருவாக்குவதில் சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இந்த ராசியில் பிறந்தவரை்கள் இயல்பாகவே நிதி ரீதியாக மிகவும் புத்திசாலித்தனமான ராசிகளில் ஒன்றாக அறியப்படுகின்றார்கள்.
அவர்கள் ஆறுதல், பாதுகாப்பு மற்றும் பொருள் நிலைத்தன்மையை விரும்புவதற்காக அறியப்படுகிறார்கள்.
அவசரமாக செலவு செய்பவர்களைப் போலல்லாமல், ரிஷபம் பணத்தை பொறுமையாகவும் நிலையானதாகவும் அணுகும் ஆற்றல் கொண்டது.
மகரம்
ஒழுக்கமான மூலோபாயவாதி சனியால் ஆளப்படும் மகரம், இயற்கையாகவே பணம் சம்பாதிக்கும் திறனை பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள்.
ஒழுக்கம் மற்றும் லட்சியத்திற்கு பெயர் பெற்ற இவர்கள் செல்வத்தை ஒரு நீண்டகால திட்டமாக அணுகுகிறார்கள்.
இவர்கள் பார்கதற்கு அதிகம் செலவு செய்வதாக தோன்றினாலும், நிதியை கையாளுவதில் இவர்கள் கில்லாடிகள். எப்படி பணத்தை பெருக்குவது என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.
கன்னி
புதனால் ஆளப்படும் கன்னி, நடைமுறைக்கு ஏற்றவாறு நடந்துக்கொள்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்கள் இயற்கையாகவே வளங்களை நிர்வகிப்பதிலும் ஆற்றல் மிக்கவர்கள் எந்த சூழ்நிலைகளையும் பகுப்பாய்வு செய்வதிலும், மற்றவர்கள் கவனிக்காத வாய்ப்புகளைக் கண்டறிவதிலும் அவர்களுக்கு கூர்மையான பார்வை காணப்படுகின்றது.
கன்னி ராசிக்காரர்கள் திட்டமிடல், பட்ஜெட் செய்தல் மற்றும் நிதிகளை ஒழுங்கமைப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்கள் இரண்டு பொருள் வாங்கும் அளவுக்கு பணத்தை சேமித்த பின்னரே ஒரு பொருள் வாழ்குவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
