நண்பர்களிடத்தில் சுயநலமாக நடந்துக்கொள்ளும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?
பொதுவாகவே ஒருவர் பிறக்கும் ராசி அவர்களின் ஆளுமை மற்றும் விசேட குணங்களில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியினர் நண்பர்கள் விடயத்தில் மிகவும் சுயநலத்துடன் நடந்துக்கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர். உயர்ந்த இலக்குகளை கொண்ட இவர்கள் நண்பர்களுக்காக பணம் செலவழிக்க விரும்புவதில்லை. உறவுகளிடம் நேர்மையாக நடந்துக்கொள்ளும் தன்மை கொண்ட இவர்கள் நண்பர்களிடத்தில் சற்று சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் லட்சிய வாதிகளாக இருக்கின்றனர். இவர்கள் தங்களின் தேவைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஒருபோதும் நண்பர்கள் விடயத்தில் கொடுக்க விழும்புவது கிடையாது.
விருச்சிகம்

விருச்சிக ராசியினர் மிகுந்த பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர்.இவர்கள் தங்களின் முன்னேற்றம் மற்றும் சொந்த தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். இவர்கள் நண்பர்களிடத்தில் எப்போதும் சுயநலம் கருதியே பழகக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        