இந்த ராசி ஆண்கள் ரொம்பவே பாதுகாப்பான காதலனாக இருப்பாங்களாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்கள் என்பவற்றில் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் துணையின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.
தனது காதலிக்கு எப்போதும் பாதுகாப்பான உணர்வை கொடுக்கக்கூடியவர்பகளாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் அதிகமாக இயல்பாகவே அதிக அக்கறை கொண்டவர்கள் இருப்பார்கள். இயல்பாகவே இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள் ஆனால் துணையின் மீது அதிக பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போது இவர்கள் இருக்கின்றார்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி பிறந்த ஆண்கள் எப்போதும் தங்களின் துணையின் விருப்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்பகளாக இருப்பார்கள். சின்ன சின்ன விடயங்களுக்கும் அதிகமாக உணர்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் துணைக்கு சிறந்த காதலனாக இருக்க முயற்சிப்பார்கள்.பாதுபாப்பு உணர்வை கொடுப்பதில் இவர்களை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை என்பது போல் நடந்துக்கொள்வார்கள்.
கடகம்
கடக ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் அக்கறையுடனும் நடந்துக்கொள்வார்கள். இவர்களின் அதிக அக்கறை துணையை அதிக பாதுகாப்பாக உணரச்செய்வதுடன் சில சமயங்களில் தொந்தரவாகவும் இருக்கும். இவர்கள் அந்தளவு பாசத்தை எப்போதும் கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |