ஹிட்லர் போல் சர்வாதிகாரிகளாகவே பிறப்பெடுத்த 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் தோற்றம், நிறம், எடை, உயரம் ஆகியவற்றில் வேறுப்படுவது போல், அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களிலும் பெருமளவான வித்தியாசங்கள் இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய நேர்மறை, எதிர்மறை குணங்களில் அவர்களின் பிறப்பு ராசியானது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே சர்வாதிகாரிகளாக இருப்பார்களாம். அப்படி தாங்கள் சொல்வதும் செய்வதும் தான் சட்டம் என்ற கொள்கையுடன் வாழும் ஆபத்தான ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் எந்த விடயத்திலும் முழுமையையும், நேர்த்தியையும் விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் குறைந்தபட்சம் ஒரு நாசீசிஸ்டிக் குணமாவது நிச்சயம் இருக்கும்.
அதாவது அவர்கள் தான் எப்போதும் உலகில் மிகப்பெரிய மேதைகள் என்ற எண்ணம் அவர்களிடம் வலுவாக இருப்பதால், தாங்கள் செய்யும் அனைத்தும் சரியாக மட்டுமே இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்புவார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் தங்களைப் பற்றி மட்டுமே அதிகம் சிந்திக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் சரியான துணை, சரியான வீடு, சரியான வேலை ஆகியவற்றை விரும்புகிறார்கள். எல்லாம் இவர்களின் கட்டளை எடி நிகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் தங்களின் பிடிவாத குணத்துக்கும் ஆடம்பர மோகத்துக்கும் பெயர் பெற்றவர்களா இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் கட்டளைக்கு மற்றவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வலுவாக இருப்பார்கள்.
இவர்கள் வாழ்வில் நேர்மைக்கும் நீதிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற போதும், தாங்கள் செய்யும் அனைத்தும் சரியானது தான் என்ற எண்ணம் இவர்களிடம் வலுவாக இருக்கும். மற்றவர்களை அடக்கியாள்வதில், வல்லவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சூரியனால் ஆளப்படுவதால் இயல்பாகவே தலைமைத்துவ குணங்களை கொண்ருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இவர்களிடம் சற்று அதிகமாகவே இருக்கும்.
உலகம் தங்களைச் சுற்றியே சுழல்கிறது என்றும், அதை அப்படியே வைத்திருக்க அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வது நியாயமானது என்றும் தங்களுக்கு தானே நம்பிக்கை கொடுத்துக்கொள்வார்கள்.
அவர்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்களாகத் தோன்றுகிறார்கள், ஆனால் இவர்கள் ஒரு சர்வாதிகாரியாக உறுவெடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |