உலகின் வெறுமையான விமான நிலையம் எங்குள்ளது தெரியுமா? வியக்க வைக்கும் பின்னணி!
பொதுவாக ஒரு விமான நிலையத்தை குறிப்பிட்ட இடத்தில் நிர்மாணிக்க வேண்டும் என்றால், அதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து பெற வேண்டியது அவசியம்.
கோட்பாட்டளவில், புதிய விமான நிலையம் உருவாக்கப்படுவது ஒரு பிராந்தியத்தின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

அந்தவகையில் சமார் 2000 ஏக்கர் பசுமையான காடுகள் அழிகப்பட்டு பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு உருவாக்கப்பட்ட ஒரு விமான நிலையம் இன்று பயன்பாடுகள் அற்று வெறுமையாக இருப்பதுடன் The world’s emptiest airport என்ற பட்டத்தையும் பெற்றுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம் இலங்கையில் அம்பாந்தோட்டையில் உருவாக்கப்பட்ட மத்தல ராஜக்ச விமான நிலையமே இவ்வாறு உலகின் வெறுமையான விமான நிலையம் என்ற பட்டத்தை பெற்றுள்ளது.

இந்த விமான நிலையம் 11,000 அடிக்கு மேல் நீளமான ஓடுபாதையைக் கொண்டுள்ளது மற்றும் 110,000 சதுர அடி முனையத்தைக் கொண்டுள்ளது, இரண்டு வாயில்கள் மற்றும் 12 செக்-இன் கவுண்டர்களைக் கொண்டுள்ளது.
ஆனால் இவை இன்று பயன்பாடு இன்றி காணப்படுவதற்கும் இந்த திட்டம் தோல்வியடைந்ததற்கும் என்ன காரணம் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
எதற்காக உருவாக்கப்பட்டது?
2009 ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டு யுத்தம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்ததன் பின்னர் சுற்றுலா துறையை மேம்படுத்தும் பல திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அதனால், இலங்கையில் ஏற்கனவே காணப்படும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பயணிகளின் வருகை அதிகரித்தன் காரணமாக சன நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் வகையில், அப்போது ஆட்சியில் இருந்த ராஜபக்ச அரசாங்கம் தங்களின் சொந்த ஊரான அம்பாந்தோட்டையில் ஒரு சர்வதேச விமான நிலையத்தை உருவாக்க வேண்டும் என்ற சுயநலத்தின் பேரில் இந்த திட்டத்தை முன்வைத்தார்கள்.
அதன் பிரகாரம் இந்த விமான நிலையம் அம்பாந்தோட்டையில் இருந்து 18 கி.மி தொலைவில் காணப்படும் மத்தல என்ற பிரதேசத்தில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டு 2013 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.

தோல்வியடைய என்ன காரணம்?
இலங்கையில் முதல் முறையாக 2000 ஏக்கர் காடுகள் அழிக்கபபட்டு உருவாக்கப்பட்ட இந்த விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதற்கு ஏதுவான சூழல் அமையவில்லை. அதாவது சரியான காற்றின் திசை கிடையாது, ஏதுவான காலநிலை கிடையாது, மேலும் பறவைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் போன்ற பல்வேறு காரணங்களால், மூன்று தடவைகள் விமானங்கள் விபத்துக்குள்ளாக நேரிட்டது.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் இலங்கையின் பிரதான நகரமாகவும் அனைத்து வசதிகளுடனும் காணப்படும் கொழும்பில் தான் தறையிறங்க விரும்பினார்கள்.
அவ்வாறான காரணங்களால் ஒரு கட்டத்துக்கு மேல் இந்த விமான நிலையம் பயனற்றாதான மாறியது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மத்தல சர்வதேச விமான நிலையத்தை மூடிவிட்டது.

ஒரு ஆட்சியாளனின் சுயநலத்தின் காரணமாக பல ஆயிரம் கோடிகளை விழுங்கிய இந்த திட்டம் இன்று தோல்வியடைந்து உலக நாடுகளால், உலகின் வெறுமையான விமான நிலையம் என்று முத்திரை குத்ததப்பட்டு கேலி செய்யப்பட்டு இலங்கை நாட்டினுள் பயனற்று கிடக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |