உயிர்போகும் தருவாயிலும் உண்மையை மட்டுமே பேசும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேரை்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில், நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே வாழ்வில் உண்மைக்கும்,நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி எந்த கடினமாக சூழ்நிலைகளிலும் கூட உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதில், உறுதியாக இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த மேஷ ராசியினர் இயல்பாகவே தங்களின் போர் குணம் கொண்டவர்களாகவும், தைரியத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றார்கள்.
இவர்கள் எந்த நிலையிலும் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். தங்களின் இந்த குணத்தை வாழ்வில் இறுதி வரையில் கடைப்பிடிக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இந்த ராசியினர் இயல்பிலேயே மற்றவர்களுக்கு துரோகம் செய்யவோ அல்லது ஏமாற்றவோ விரும்ப மாட்டார்கள், மேலும் எப்போதும் பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொள்வதையே விரும்புவார்கள். உயிருக்கே ஆபத்து இருப்பதாக அச்சுறுத்தப்பட்டாலும் உண்மைக்கு புறம்பாக செயற்பட மாட்டார்கள்.
கன்னி
கிரகமான புதனால் ஆளப்படும் கன்னி ராசிக்காரர்கள் புத்திகூர்மைக்கு பெயர் பெற்றவர்களாகவும், எதிலும் முழுமையையும் நேர்த்தியையும் விரும்பும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் கடமை உணர்வுக்கும், நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன் எந்த நிலையிலும் உண்மையை மட்டுமே பேசுவார்கள் என்பதை உறுதியாக கூற முடியும்.
அவர்கள் அனைத்து விஷயங்களையும் கூர்மையாக கவனிப்பவர்கள், இவர்களின் கண் முன் நடக்கும் எந்த அநீதியையும் தைரியமாக எதிர்த்து நிற்பார்கள். உண்மையை காக்க உயிழரையும் கொடுக்க தயங்க மாட்டார்கள்.
தனுசு
குருபகவனால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள், சாகச குணத்துக்கும் சுதந்திர உணர்வுக்கும் பெயர் பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள்.
ஆனால் ஒருபோதும் மற்றவர்களை பொய் சொல்லி ஏமாற்ற வேண்டும் என்று மனதளவில் கூட நினைக்க மாட்டார்கள். இவர்கள் எந்த உறவிலும் உண்மையாக இருப்பார்கள்.
உண்மையை மறைத்தால் தான் உயிரை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நிலையிலும் உண்மையை வெளிப்படுத்துவதற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |