துணையை எப்போதும் சந்தேகப்படும் ஆண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய வகையில் தொடர்பு காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே தங்களின் வாழ்க்கை துணை மீது முழுமையான நம்பிக்கை அற்றவர்களாக இருப்பார்கள்.
அப்படி மனைவி மீது அல்லது காதலி மீது எப்போதும் சந்தேக கண்ணை கொண்டிருக்கம் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் கிரகங்களின் தளபதியான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுவதால், எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் போக்கை கொண்டிருப்பார்கள்.
இவர்கள் தங்களின் துணை முழுமையாக இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அதனால் இவர்கள் எப்போதும் துணையை ஆராயும் குணத்தை நிச்சயம் கொண்டிருப்பார்கள்.
துணையின் செயல்பாட்டில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட அவர்களுக்குள் இருக்கும் சந்தேக மிருகத்தை வலுவாக தூண்டிவிட்டு, உறவில் விரிசல் ஏற்பட காரணமாகிவிடும்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் தீராத ஆர்வம் கொண்ட வண்ணத்துப் பூச்சிகளை போன்றவர்கள்.இவர்களுக்கு காதல் மீது எந்தளவுக்கு ஆர்வம் இருக்கின்றதோ, அதை விட பல மடங்கு துணையின் மீது சந்தேக குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இயல்பாகவே இவர்களிடமிருக்கும் இரட்டை ஆளுமை அவர்களை அதிகமாக சிந்திக்க வைக்கிறது, இது அவர்களின் துணையின் ஒவ்வொரு வார்த்தைக்கும், செயலுக்கும் பின்னால் உள்ள நோக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கும்.
இவர்கள் துணையின் ஒவ்வொரு செயலுக்கும் தாங்களாகவே அர்த்தத்தை உருவாக்கி அவர்கள் மீது சந்தேகப்படும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
கன்னி
புத்திக்கூர்மை மற்றும் பகுப்பாய்வுத் திறமைக்குப் பெயர் பெற்ற கன்னி ராசி ஆண்கள் தங்கள் உறவுகளிடத்திலும் அதிகளிவில் ஆய்வு செய்யும் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் மனைவி அல்லது காதலியின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும், அவர்களின் மெசேஜ் முதல் அவர்கள் பதிலளிக்கும் விதம் வரை அனைத்தையும் கவனித்து, சிறிய மாற்றங்களுக்கும் வலுவாக சந்தேகம் கொள்ளும் குணம் கொண்டவர்கள்.
கன்னி ராசிக்காரர்கள் காதலில் முழுமையைத் தேடத் தூண்டும் அவர்களின் உள்ளுணர்வுடன் தொடர்ந்து போராடுகிறார்கள்.அதுவே அவர்களின் சந்தேக குணத்துக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |