கணவனை கட்டுக்குள் வைக்க நினைக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?
திருமணம் என்பது ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி வாழ்வில் முக்கியமான விடயமாக இருக்கின்றது.திருமணத்தின் பின்னர் இருவரின் வாழ்க்கையிலுமே பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவரின் குணத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்கள் திருமண வாழ்வில் கணவனை அடக்கி ஆழ வேண்டும் என நினைப்பார்கள்.அப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே அதிக தைரியசாலிகளாகவும் எதற்கொடுத்தாலும் கோபப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் இலகுவில் யாருக்கும் அடங்கி வாழ மாட்டார்கள். இந்த குணத்தின் காரணமாக கணவனை வாழ்நாள் முழுதும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் சிறந்த பேச்சாற்றல் மற்றும் மனவலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கணவனின் பேச்சுக்கு ஒருபோதும் கட்டுப்பட மாட்டார்கள். தங்களுக்கு கணவன் மரியாதை கொடுக்க வேண்டும் என எதிர்ப்பார்பார்கள். இவர்கள் அன்பு செலுத்துவதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த பெண்கள் துணையின் மீது அதிக அன்பும் அக்கறையும் உடையவர்களாக இருப்பார்கள். இருப்பினும் கணவனின் ஆசையை விட தங்களின் ஆசைப்படி தான் அனைத்தும் நடக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
மகரம்
மகர ராசியில் பிறந்த பெண்கள் தங்களின் கட்டளைபடியே வாழ்க்கை துணை நடந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கணவனை வாழ்நாள் முழுவதும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புவார்கள்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |