இந்த ராசி பெண்களுக்கு பயம்னா என்னானே தெரியாதாம்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க
பொதுவாகசே அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். ஆனால் இது எல்லா சந்தர்ப்பங்களிலும் சாத்தியமற்றது.
உதாரணமாக தொழில் புரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் சில சமயம் நம் மீது தவறு இல்லாத போதும் கூட விட்டுக்கொடுத்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
அப்படிப்பட்ட நேரத்தில் பலரும் தன்பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துகூறாமலேயே விட்டுவிடுவார்கள்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியை சேர்ந்த பெண்கள் எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் பயப்பட மாட்டார்கள்.இழப்பது எதுவாயினும் தைரியமாக உண்மையை பேசும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசி பெண்கள் எந்த நேரத்திலும் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள பயப்பட மாட்டார்கள். தனக்கு சரி என தோன்றுவதை கொஞ்சமும் தயக்கமின்றி பேசிவிடுவார்கள்.
நினைத்த விடயத்தை அடைவதற்காக எந்த எல்லைக்கும் சென்று போராட கூடியவர்கள். இவர்கள் பயம் என்றால் என்ன என்பதை உணராதவர்கள் போல் நடந்துக்கொள்வார்கள்.
சிம்மம்
இந்த ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த ஒருபோதும் அச்சப்படுவது கிடையாது.எப்போதும் எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள்.
தனுசு
இந்த ராசி பெண்களிடம் சாகச மற்றும் உண்மையைத் தேடும் இயல்பு இயற்கையாகவே இருக்கும். அவர்கள் தங்கள் அறிவாற்றலையும் மனதில் தோன்றும் விடயங்களையும்.அச்சமின்றி வெளிப்படுத்துகிறார்கள்.
கும்பம்
கும்ப ராசியினர் எப்போதும் முற்போக்கான சிந்தனையுடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் புதுமையான யோசனைகளையும் நம்பிக்கைகளையும் அச்சமின்றி பகிர்ந்து கொள்கிறார்கள். எந்த சூழ்நிலைக்கும் அஞ்சாதவர்களாக இருப்பார்கள். இவர்கள் இழப்புக்களை பெற்றி ஒரு போதும் கவலைப்பட மாட்டார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |