2025 இல் கடனில் மூழ்க போகும் ராசியினர் இவர்கள் தானாம்... பண விடயத்தில் ஜாக்கிரதை
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் கல்வி நிலை, பொருளாதாரம், உடல் ஆரோக்கியம் என பல்வேறு வழிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் புதிய ஆண்டு ஆரம்பமாகின்றது என்றால் பொரும்பாலானவர்கள் வருட ராசி பலனை தொரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
குறிப்பாக புதிய ஆண்டில் நிதி நிலை எவ்வாறு இருக்கும் என்பதே பலரின் பிரதான தேமலாக இருக்கும். கிரகங்களின் நிலையின் பிரகாரம் ஒவ்வொரு ராயினருக்கும் சாதக பாதக பலன்கள் கிடைக்கின்றது.
2025 ஆம் ஆண்டுக்கு கணிக்கப்படுட்டுள்ள ராசிபலனின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினருக்கும் புதிய வருடம் நிதி ரீதியில் பாதக பலன்களை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே 2025 இல் பண விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் அதிகளவில் கடன் சுமைகள் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடி நிலை காரணமாக நிதி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
இந்த ராசியினர் புதிய வருடத்தில் ஆடம்பர செலவுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பண விடயங்களை கையாளும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் 2025 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியில் மிகவும் மோசமாக பாதிக்கப்படப்போகின்றார்கள்.
புதிய ஆண்டு முழுவதுமே நிதி தொடர்பான பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். மிகவும் சவால் மிக்க ஆண்டாக 2025 அமையும்.
பணபிரச்சினையால் தொழில் புரிவதை நிறுத்திவிட்டு இந்த ராசியினர் வணிகத்தை நோக்கியோ, பணம் சம்பாதிக்க பிற எளிதான வழிகளை நோக்கியோ சிந்திக்க தூண்டப்படுவார்கள். நிதி விடயத்தில் மிகுந்த அவதானம் தேவை.
மகரம்
மகர ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு கடன் தொல்லைகள் அதிகரிக்கும் ஒரு சவாலான ஆண்டாக இருக்கும்.
இவர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரியளவில் நட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.
இந்த ராசியினர் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை புதிய ஆண்டில் முற்றாக தவிர்த்துவிட வேண்டும். பணத்தை இழக்கும் வழிகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |