தடை கல்லை படிக்கல்லாய் மாற்றும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எவ்வளவு தடைகள் வந்தாலும் தங்களின் இலக்கில் கவனம் செலுத்தும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி தடைகளை வெற்றி படிகளாக மாற்றும் திறமை கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படுகின்றார்கள்.இதனால் இயல்பாகவே இவர்களுக்கு தன்னம்பிக்கை தைரியம் அதிகமாக இருக்கும்.
இவர்கள் தங்களின் இலக்கை நிர்ணயம் செய்துவிட்டால், எவ்வளவு தடைகள் வந்தாலும் ஒருபோதும் பின்வாங்குவதே கிடையாது.
இந்த ராசியினர் தடைகளையும் கூட வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் அறிவாற்றலின் கிரகமான புதன் கிரகத்தால் ஆளப்படுகின்றார்கள். இதனால் இவர்கள் எந்தகைய கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் இலக்கினை பாதிக்கும் விடயங்களை சமயோசிதமாக சிந்தித்து சாமகமாக மாற்றிவிடும் ஆற்றல் இவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.
இவர்களின் அதீத புத்திசாலித்தனம் மற்றும் திறமை காரணமாக தடைகைளை வெற்றிக்கான வாய்ப்புகளாய் மாற்றிக்கொள்வார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் கிரகங்களின் அதிபதியான சிம்ம ராசியால் ஆளப்படுகின்றார்கள்.
இவர்கள் இருண்ட காலங்களில் கூட பிரகாசிக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.அதாவது அனைவரும் கஷ்டப்படும் நிலை நிலை வந்தாலும் கூட இவர்கள் ஏதோ ஒரு வகையில் சிறப்பாக இருப்பார்கள்.
இயல்பாகவே இவர்களுக்கு சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகமாக இருக்கும். கடினமான காலத்தையும் தங்களின் புத்திக்கூர்மையால் சாதித்துவிடும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |