இந்த ராசி ஆண்களுக்கு மனைவி தான் எல்லாமே... கண்ணுக்கு இமையாய் இருப்பார்களாம்
ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் விசேட குணங்களிலும், எதிர்கால வாழ்கை மற்றும் அவர்களின் நடத்தைகளிலும் பாரியளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்த வகையில் குறிப்பட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் திருமணத்துக்கு பின்னர் தங்களின் மனைவி தான் தங்களின் உலகம் என வாழ ஆரம்பித்துவிடுவார்களாம்.
மனைவிக்கான தங்களின் உயிரையும் கொடுக்க துணியும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே தலைமைத்துவ குணங்கள் அதிகம் கொண்டவர்களாகவும், தைரியத்தின் சின்னங்களாகவும் இருப்பார்கள்.
இருப்பினும் இந்த ராசி ஆண்கள் திரமணத்தின் பின்னர் மனைவிக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் அளவுக்கு தங்களின் நடத்தையை மாற்றிக்கொள்வார்கள்.
புகுந்த வீட்டில் தங்களின் மனைவிக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் இவர்கள் மற்றவர்கள் முன்னிலையிலும் கூட மனைவியிடம் பணிவாக நடந்துக்கொள்வார்கள்.
இவர்கள் எந்த சூழ்நிலையிலும் மனைவியை மற்றவர்களின் முன்னிலையில் விட்டு கொடுக்கமாட்டார்கள், அது யாராக இருந்தாலும் சரி. மனைவியின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய குணம் இவர்களிடம் இருக்கும்.
கடகம்
கடக ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே காதல் மற்றும் திருமண வாழ்க்கை மீது அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி ஆண்கள் திருமணத்தின் பின்னர் தங்களின் மனைவியை கண்ணுக்கு இமை போல் இருந்து பாதுகாப்பார்கள்.
இவர்களை தாண்டி தான் மனைவியிடம் எந்த பிரச்சினையும் செல்லும் என்ற விடயத்தில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.
மனைவியை உறவினர்கள் முன்னிலையில் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். மனைவிக்கு எல்லா வகையிலும் துணையான இருப்பார்கள்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்த ஆண்கள் உறவுகளை சமநிலைப்படுத்துவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்கள் திருமணத்தின் பின்னர் மனைவிக்க அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
பெண்கள் மனைவியாக மாறும் பொது தனது கணவனிடம் எதிர்பார்க்கும் அனைத்தையும் இவர்கள் நிறைவு செய்பவர்களாக இருப்பார்கள்.
மனைவியின் உணர்வுகளை தாய் போல் புரிந்துக்கொள்ளும் ஆற்றல் இந்த ராசி ஆண்களிடம் இயல்பாகவே இருக்கும்.
இவர்கள் மனைவியின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். அனைத்து உறவுகளையும் விட இவர்களுக்கு மனைவி தான் முக்கியமாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |