தவறியும் இந்த ராசியினரின் கோபத்துக்கு ஆளாகாதீங்க.... விளைவு மோசமா இருக்கும்!
பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியான தாக்கத்தை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே சற்று உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்களாகவும் கோபத்தை கட்டுப்படுத்த இயலாதவர்களாகவும் இருப்பார்கள்.
அப்படி எல்லா சந்தர்ப்பங்களிலும், ஆபத்தான விளைவுகளை தோற்றுவிக்கும் அளவுக்கு கோபப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மமான குணத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனதில் பல ரகசியங்களை சுமந்துக்கொண்டு இருப்பதால், எளிதில் கோபப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் கோபப்படும்போது மிகவும் ஆபத்தான ராசியாக அறியப்படுகின்றார்கள். மாற்றம் மற்றும் தீவிரத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படும் இவர்களின் ஆழ்ந்த உணர்ச்சிகள் சக்திவாய்ந்த எதிர்வினைகளுக்கு காரணமாக அமைந்துவிடும்.
இவர்களின் கோபம் எப்போதும் வெளிப்படையானதாக இருக்காது. இவர்கள் மிகவும் அபாயகரமான விளைவுகளை உருவாக்கும் வகையில் கொடூரமான கோபத்தை கொண்டிருப்பார்கள்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் உக்கிரமான மற்றும் உணர்ச்சிவசப்படும் தன்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
போர் மற்றும் ஆக்கிரமிப்பின் கிரகமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்களின் கோபம் எதிரிகளால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்த ராசியினர் நண்பர்களுக்காக உயிரையும் கொடுக்கும் அளவுக்கு நல்லவர்களாக இருக்கும் அதே வேலையில் இவர்களின் கோபத்துக்கு ஆளானால் எதிரிக்கு நரகத்தை காட்டிவிடுவார்கள்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் இயல்பாகவே தலைமைத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவர்களாகவும் யாருக்கும் கட்டுப்படாத ஆளுமையாகவும் இருப்பார்கள்.
இவர்கள், தங்களைப் பற்றிய வலுவான உணர்வைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் அவமரியாதை செய்யப்பட்டதாகவோ அல்லது புறக்கணிக்கப்பட்டதாகவோ உணரும்போது நம்பமுடியாத அளவிற்கு கோபப்படுவார்கள்.
அவர்களின் கோபம் பெரும்பாலும் சத்தமாகவும், நாடகமாகவும், புறக்கணிக்க முடியாததாகவும் இருக்கும். இவர்களின் கோத்தை எதிர்கொள்வது மிகவும் கடினம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |