உலகின் தலைசிறந்த அம்மாக்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் தாயாக மாறிய பின்னர் துளியும் தன்நலம் அற்று தன் குழந்தைக்காக உயிரையும் கொடுக்கும் தியாக குணம் நிறைந்த தாயாக இருப்பார்களாம்.
அப்படி தன் குழந்தையின் நலனுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும், தங்களின் சுக துக்கங்களை மறைத்துக்கொண்டு உலகின் தலைசிறந்த தாயாக திகழும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியினர் பெரும்பாலும் ராசியின் பராமரிப்பாளர் என்று அழைக்கப்படுகிறது, இந்த ராசியில் பிறந்த பெண்கள் ஒரு தாயாக தலைசிறந்தவர்களாக அறியப்படுகின்றார்கள்.
தங்கள் குழந்தைக்கு ஒரு கடினமான நாள் இருந்தால், இவர்கள் அதை வேறு யாரும் புரிந்துக்கொள்வதற்கு முன்பாக உணர்ந்து அதற்காக நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இவர்கள் பெரும்பாலும் உளவியலாளர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு தங்களின் குழந்தையின் ஒவ்வொரு அசைவுக்கும் கூட அர்த்தம் நிச்சயம் தெரிந்திருக்கும். தங்களின் குழந்தைக்காக தங்களின் முழு சந்தோஷத்தையும் கூட தியாகம் செய்ய இவர்கள் தயாராக இருப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தாயாக மாறும் போது இதற்கு பிறகான தங்களின் வாழ்க்கையை தங்களின் பிள்ளைகளுக்காகவே அர்ப்பணித்துவிடும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்கள் தங்களின் கணவனை பிரிகின்ற நிலை வந்தாலும் ஒருபோதும் தங்களின் குழந்கைகளை வி்ட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். அவர்களுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிற்நத பெண்கள் ஒரு தாயாக மிகவும் உன்னதமானவர்களாக அறியப்படுகின்றார்கள். இவர்கள் தங்களின் குழந்தையின் நலனுக்காக தங்களை வருத்திக்கொள்ளவும் தயாராக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் குழந்தைகளின் ஒவ்வொரு எதிர்ப்பார்ப்பு மற்றும் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக வாழ்க்கை முழுவதும் கூட கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.
குழந்தையை காப்பாற்றுவதற்கு தங்களின் உயிரை கொடுக்க வேண்டிய நிலை வந்தாலும் அதனை முழு மனதுடன் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |