திருமணத்தை அடியோடு வெறுக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே ஆண்களுக்கு சரி, பெண்களுக்கும் சரி தங்களின் திருமணம் குறித்து நிச்சயம் பல கனவுகள் இருக்கும். பெரும்பாலானோர் திருமணம் செய்வதை தான் வாழ்வில் செட்டில் ஆவது என்றே நினைத்துக்கொண்டிருக்றோம்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வெளிப்படையாக காட்டிக்கொள்ளாவிட்டாலும் மனதளவில் திருமணத்தை வெறுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
அப்படி வாழ்வில் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தையே அடியோடு வெறுக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே தாங்கள் சொல்லுக்கு மற்றவர்கள் கட்டுப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு திருமண பந்தத்தில் இணைந்து தங்களை மாற்றிக்கொள்வது மிகவும் கடினமானதாக இருக்கும்.
மேலும் இவர்கள் தங்களின் சுதந்திரத்தை எந்த நிலையிலும் இழக்க விரும்புவது கிடையாது. திருமணம் இவர்களின் சுதந்திரத்தை பாதிக்ககூடும் என்பதால் இவர்கள் இதில் பெரிதாக ஆர்வம் காட்டுவது கிடையாது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாகச இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். வாழ்வில் தொடர்ச்சியாக புதிய அனுபவங்களையும் சவால்களையும் துரத்தும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், காதல் விடயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் பொறுப்புகளை ஏற்க மறுக்கும் இவர்களின் குணத்தால் திருமணத்தில் ஈடுபாடு அற்றவர்களாக இருப்பார்கள்.
உண்மையில் இவர்கள் திருமண உறவை விடவும் தனிமையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், அதுமட்டுமன்றி அவர்களை கட்டுப்படுத்தும் எதையும் இவர்கள் முற்றிலும் வெறுக்கின்றார்கள்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் தங்களின் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களின் இந்த குணம் இவர்களுக்கு என்ன தேவை என்பதில் எப்போதும் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.
புதனால் கிரகத்தால் ஆளப்படும் இவரை்கள் எப்போதும்,வாழ்க்கையில் சுவாரஸ்யம் மற்றும் தூண்டுதலை அதிகம் விரும்பும் நபர்களாக இருப்பதால், பெரும்பாலும் ஒரே விஷயத்திலோ அல்லது ஒரே செயலிலோ குறிப்பிட்ட காலத்துக்கு மேல் இவர்களால் நீடிக்க முடியாது.
இந்த குணங்களால் இவர்களுக்கு காதல் மீது ஈடுபாடு இருந்தாலும், திருமணம் என்றால் ஒரு வித பயம் ஏற்படும். இதனால் இவர்கள் திருமண பந்தத்தை வெறுக்கின்றார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |