இந்த ராசியினர் பிறப்பிலேயே ராஜதந்திரிகளாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகளில் பொருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பபடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே மிகவும் தந்திரமானவர்களாக இருப்பார்கள். இவர்களை வெல்வது யாருக்கும் சவாலான விடயமாக இருக்கும்.
அப்படி பிறப்பிலேயே ராஜதந்திர எண்ணங்களுடன் பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் புத்திசாலிதனத்துக்கும் அதே சமயம் இரட்டை இயல்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் அறிவாற்றலை வழங்கும் கிரகங்களின் இளவரசனான புதனால் ஆளப்படுவதால் இவர்கள் திட்டம் தீட்டுவதிலும் மற்றவர்களின் சூழ்ச்சிகளை அறிந்து வெற்றியடைவதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
இவர்கள், மக்களையும், சூழ்நிலைகளையும் விரைவான புரிந்துக்கொண்டு செயற்படும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்கை தோற்கடிப்பது இயலாத காரியமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களுடன் ஆன்ம ரீதியில் விரைவில் இணைந்துவிடும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களின் மனதை படிப்பதிலும் தந்திரமாக திட்டமிடுவதிலும் வல்லுநர்களாக இருப்பார்கள்.
இவர்களின் ராஜதந்திர இயல்பு இவர்களுக்கு பெரிய வெற்றியை கொடுப்பதுடன் இவர்கள் மற்றவர்களால் தோற்றகடிக்க முடியாத நிலையை அடைவார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் மன விளையாட்டுகளை விளையாடுவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் புத்திக்கூர்மையையும், விமர்சனக் கண்ணோட்டத்தையும் ஒன்றாக இணைப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ஒரு திட்டத்தை செயற்படுத்தும் முன்னரே அதன் விளைவு பற்றிய நூறு முடிவுகளை அவர்கள் கணத்திருப்பார்கள்.
இவர்களிடம் மற்றவர்களின் அடுத்தகட்ட நகர்வை கணிக்கும் ஆற்றல் இருப்பதால்,இவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக அறியப்டுகின்றார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |