இந்த ராசியில் பிறந்தவங்க அமைதியின் சொரூபமாக இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?
பொதுவாக ராசிபலன்கள் கிரக மாற்றங்களின் அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு குழந்தையுமே அவர்களின் பெற்றோரின் வாழ்க்கையில் சந்தோஷத்திற்கான முக்கிய காரணமாக இருப்பார்கள்.
பெற்றோரின் வயதான காலத்தில் அவர்களை அக்கறையாகவும், அன்புடனும் பார்த்துக் கொள்ளும் மகன்கள் அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. சில அதிர்ஷ்டசாலி பெற்றோருக்கு மட்டுமே அப்படியான குழந்தைகள் கிடைக்கின்றன.
ஜோதிடத்தின்படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அமைதியாகவே இருப்பார்களாம். ஏனெனின் அவர்களின் பலமாக அமைதி இருக்கும்.
அந்த வகையில், அமைதியாகவே வாழ பிறந்தவர்கள் எந்த ராசியில் இருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
1. கடக ராசி
- கடக ராசியில் பிறந்தவர்கள் சந்திரனால் ஆளப்படுவார்கள். ஆழ்ந்த உணர்ச்சி உணர்திறன் மற்றும் சுயபரிசோதனைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். கடக ராசியில் பிறந்தவர்கள் சுற்றியுள்ளவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் பெரிய சமூகக் கூட்டங்களை விட ஒரு சிலருடன் ஆழமாக இணையக்கூடிய நெருக்கமான சூழல்களையே விரும்புகின்றனர்.
2. கன்னி ராசி
- கன்னி ராசியில் பிறந்தவர்கள் திட்டமிட்டு வாழ்க்கையை வாழும் நபராக இருப்பார்கள். புதன் கிரகத்தால் ஆளப்படும் இவர்கள் அறிவுசார்ந்தவர்களாக இருப்பார்கள். நிதானமாக இருக்கும் இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். அமைதியாக இருக்கும் பண்பு தான் அவர்களின் வளர்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகின்றது. நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள்.
3. விருட்சக ராசி
- விருட்சக ராசியில் பிறந்தவர்கள் புளூட்டோவால் ஆளப்படுவார்கள். அமைதியானவர்களாக இருப்பார்கள். நற்குணம் கொண்டவர்களாக இருக்கும் இவர்கள் சமூகத்தில் மதிக்கப்படுவார்கள். எப்போதும் விசுவாசத்துடன் நடந்து கொள்வார்கள். வார்த்தைகளால் மற்றவர்களை காயப்படுத்த விரும்பமாட்டார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
