இந்த ராசியில் பிறந்தவங்க எப்போதும் இளமையாகவே இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?
எவ்வளவு வயதானலும் இளமையாகவே இருக்க வேண்டும் என பெரும்பாலும் மனிதர்களாக பிறந்த அனைவரின் உச்சப்பட்ச ஆசையாகும்.
ஆனால் நம்மிள் பலருக்கும் இந்த கனவு நிறைவேறுவதில்லை. சிலர் இளமையாக இருப்பதற்காக லட்சங்களில் செலவு செய்யக்கூட தயாராக இருக்கிறார்கள்.
இதன் விளைவாக தான் இன்று சந்தையில் அழகு பொருட்கள் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. சிலர் விலையுயர்ந்த க்ரீம்கள் மற்றும் சிகிச்சைகளை எடுத்து கொள்கிறார்கள். இது போன்ற செயல்கள் இளமையுடன் கூடிய அழகையும் தருகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் எவ்வளவு வயதானாலும் இளமையாகவே இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில், எவ்வளவு வயதானாலும் இளமையாகவே இருக்கும் ராசியினர் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
எப்போதும் இளமையாக இருக்கும் ராசியினர்
மிதுனம் | மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் தீவிரமான ஆர்வத்துடன் இருப்பார்கள். அவர்களிடம் இருக்கும் விளையாட்டுத்தனமான ஆற்றல் அவர்களை எப்போதும் இளமையாக வைத்திருக்கும். அவர்களின் உண்மையான வயதை விட பல ஆண்டுகள் இளமையாகக் காட்டுவதால் நிறைய வாய்ப்புகள் வந்து சேரும். கற்றல் மற்றும் சமூகமயமாக்கல் மீதான ஆர்வம் அவர்களிடம் அதிகமாக இருக்கும். துடிப்பான, இளமையான தோற்றத்துடன் இருக்கும் இவர்களிடம் நிறைய பேர் காதல் கொள்வார்கள். |
துலாம் | துலாம் ராசியில் பிறந்தவர்கள் அழகின் கிரகமான சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இயற்கையாகவே இளமையாகவும், கவர்ச்சியான தோற்றத்தையும் கொண்டிருப்பார்கள். தங்களின் சுய பராமரிப்பு மற்றும் சமநிலையை பேணும் நபராக இருப்பார்கள். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கொண்டிருப்பதால் வசீகரமும், எளிமையான ஆளுமையும் கொண்டிருப்பார்கள். மன அழுத்த பிரச்சினைகளை தவிர்ப்பார்கள். |
சிம்மம் | சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே சக்திவாய்ந்த ஆளுமை மற்றும் பிரகாசமான ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். வயதுக்கு மீறி அவர்களை இளமையாகக் காட்டுவதால் வாழ்க்கை மீதான ஆர்வம் அதிகமாக இருக்கும். எப்போதும் இயற்கையான கவர்ச்சி கொண்டிருப்பதால் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். சுய பராமரிப்பு மீதான அவர்களின் ஆர்வம் இளமையாகவே வைத்திருக்கும். |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்FOLLOW NOW
