கோடைக்கால களைப்பை விரட்டியடிப்பது எப்படி?
பொதுவாக அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் அதிக நேரம் அடைப்பட்டு இருப்பார்கள்.
இதனால் அவர்களால் கோடைக்கால வெப்பத்தை பற்றிய சிந்தனை பெரிதாக இருக்காது. மாறாக அவர்கள் வேலை முடிந்து வெளியில் வந்தவுடன் வெயில் உடம்பில் படும் பொழுது சரும பாதிப்புக்கள் மற்றும் அளவற்ற களைப்பு ஏற்படலாம்.
இன்னும் சிலருக்கு கோடைக்காலங்களில் வெளியில் சென்று வந்தால் தலை பாரமாகவும், தலை வலிப்பது போன்றும் தோன்றலாம்.
இது போன்ற பிரச்சினைகளை எப்படி கட்டுபடுத்துவது என தெரியாமல் பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
அப்படியாயின் கோடைக்காலங்களில் ஏற்படும் களைப்பை எப்படி இலகுவாக போக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
களைப்பை போக்குவது எப்படி?
1. அலுவலகத்தில் அதிக நேரம் அடைப்பட்டு இருப்பவர்கள் அதிக நேரம் காற்றோட்டம் இல்லாமல் இருப்பார்கள். அப்படியானவர்கள் களைப்பாக உணர்ந்தால், காற்றோட்டம் உள்ள இடங்களுக்கு வர வேண்டும்.
2. வேலைகளை முறைப்படுத்தி செய்தால் உடல் களைப்பாகாமல் இருக்கும். வேலைகளை சரியாக திட்டமிட்டு, நேர மேலாண்மை பின்பற்றினால் நிதானமாக எதையும் செய்யலாம்.
3. ஏசி அறைகளில் பணிபுரிவோருக்கு நீரிழப்பு ஏற்படுவது வெளியில் தெரியாது. அவர்கள் தேவைக்கு ஏற்ப தண்ணீர் அருந்த வேண்டும். உதாரணமாக காபி, தேநீர், கோலா மற்றும் குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.
4. மேற்கத்திய உணவு வகைகளில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் கொழுப்பு இருக்கும். இதனால் அப்படியான உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்ளாது, காய்கறி, பழங்களை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
5. தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். குறைந்தது ஆறு மணி நேரம் எவ்வித இடையூறும் இல்லாமல் தூங்க வேண்டும். அதிகாலை நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
