அருவருக்கத்தக்க குணம் கொண்ட ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய தனித்துவமான குணங்கள் மற்றும் ஆளுமைகளுக்கும் அவர்களின் பிறப்பு ராசிக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே சில அசிங்கமான பண்புகளை கொண்டவர்களாக இருப்பார்களாம்.
இவர்களின் சில நடத்தைகள் , பேச்சு மற்றும் எண்ணங்கள் மற்றவர்களின் பார்வைக்கு அருவருக்கத்தக்கதாக இருக்கும். இப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் பெரும்பாலான சமயங்களில் ஒற்றுமை இருப்பதில்லை.
இவர்களின் இந்த குணம் மற்றவர்களின் பார்வையில் இவர்களின் ஆளுமையை பற்றிய தவறான புரிதலுக்கு காரணமாகிவிடுகின்றது.
ஆனால் இவர்கள் வேண்டுமென்றே தங்களின் சொல்லை காப்பாற்றாமல் இருப்பதில்லை, இவர்களின் இயல்பே அப்படி தான் இருக்கும்.இதனால் இவர்கள் பொறுப்பற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் குணம் மற்றவர்களுக்கு இவர்கள் மீது நம்பிக்கை இல்லாமலால் செய்கின்றது. மேலும் சிலர் இவர்களின் குணம் அசிங்கமாகது என விலகிவிடுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தலைமைத்துவ குணங்கள் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆனால் இவர்கள் எப்போதும் மற்றவர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பது இவர்களை மற்றவர்கள் அசிங்கமான குணம் கொண்டவர்களாக நினைக்க காரணமாகின்றது.
இவரை்கள் மற்றவர்களை விட தன்னை உயர்த்திக் கொள்ளத் தொடங்கும்போது இந்த அணுகுமுறை நிச்சயமாக அவர்களின் "அசிங்கமான" பக்கத்தை வெளிப்படுத்தும்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் தங்கள் இலக்குகளில் மட்டுமே கவனம் வெலுத்தும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இது வாழ்க்கையில் வெற்றியடைய முக்கிய காரணமாக இருந்தாலுமே கூட தங்களின் வெற்றிக்காக மற்றவர்களை அழிக்கவும் தயங்காத இவர்களின் குணம் அருவருக்கத்தக்கதாகவே அமைந்து விடுகின்றது.
மகர ராசிக்காரர்களின் மூர்க்கமான மற்றும் உறுதியான பணி நெறிமுறை ஒரு உண்மையான வாழ்க்கை முறையாகத் தோன்றலாம், வேறு எதற்கும் அல்லது யாருக்கும் இடமளிக்காது. இந்த குணம் மற்றவர்களின் பார்வையில் மிகவும் அசிங்கமானதாக தோன்ற காரணமாகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |