இந்த ராசியினர் முகம் போல் அகமும் ரொம்ப அழகாம்... நீங்களும் இந்த ராசியா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு மிகவும் வசீகரமான தோற்றத்தை கொண்டிருக்கும் அதே சமயம் அவர்களின் உள்ளமும் இரக்கம் நிறைந்ததாக இருக்குமாம்.
அப்படி வெளிதோற்றத்தில் மாத்திரமன்றி பரிசுத்தமான ஆன்மாவையும் கொண்டுள்ள ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயற்கையாகவே மற்றவர்களை ஈர்க்கும் அளவுக்கு அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் மனம் அவர்களை விடவும் அழகானதாக இருக்கும். குறிப்பாக இவர்கள் மற்றவர்களின் கஷ்டத்தை பார்த்து கண்ணீர் சிந்தும் அளவுக்கு மென்மையான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் பணம் கொஞ்சமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
வெளித்தோற்றத்திற்கு அப்பால், அவர்களின் உண்மையான அழகு அவர்களின் குணத்தில் பிரதிபலிக்கும்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே வசீகர பார்வை கொண்டவர்களாகவும் மென்மையான இதயத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த ராசியினர் ஆழ்ந்த பச்சாதாபம் கொண்டவர்கள், அவர்கள் நேசிப்பவர்களைப் பாதுகாக்கவும், ஆதரிக்கவும் எந்த சூழ்நிலையிலும் தயாராக இருப்பார்கள்.
இவர்கள் தங்களுக்கு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உன்னத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தலைமைத்துவ பண்புகளை அதிகம் கொண்டவர்களாகவும், கம்பீர தோற்றம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களின் கருணை நிறைந்த குணம், அரவணைப்பு மற்றும் தாராள மனப்பான்மை அவர்களை கவர்ச்சிகரமானவர்களாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த மனிதனாகவும் மாற்றுகின்றது.
இவர்கள் மற்றவர்களின் உயர்வுக்கு துணைப்புரியும் குணம் கொண்டவர்களாகவும், மற்றவர்களின் திறமைகளை துளியும் பொறாமையின்றி பாராட்டும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |