பொய் சொல்வதில் கில்லாடிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதாக தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி பொய் செல்வதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்களாம்.
அப்படி இவர்கள் சொல்வது பொய் என்பதை யாராலும் கண்டுப்பிடிக்கவே முடியாத அளவுக்கு தத்ரூபமாக பொய் சொல்லும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே இரட்டை இயல்புக்கு பெயர்பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்கள் மனதில் இருப்பதை அறிந்துக்கொள்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கும் அதே வேளை இவர்களின் உணர்வுகளை யாரிமும் வெளிப்படுத்த மாட்டார்கள்.
இவர்களுக்கு பொய் சொல்வது கைவந்த கலையாக இருக்கும். தங்களின் வார்த்தைகள் மூலமாகவும், செயல்பாடுகள் மூலமாகவும் உண்மை போன்றே சிறப்பாக பொய் சொல்லுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ரகசியத்தை காப்பாற்றுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்களிடதிருந்து ஒரு தகவலை பெற்றுக்கொள்வது மிகவும் சவாலான விடயமாக இருக்கும்.
இவர்கள் ரகசியத்தை காப்பாற்றுவதற்காக அதிகமான நேரங்களில் பொய் சொல்கின்றார்கள்.இவர்கள் எப்போதும் மர்மம் நிறைந்த இயல்புடையவர்களாக தோன்றுவார்கள்.
இவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பது மற்றவர்களுக்கு தெளிவாக புரியாத வகையில் பொய் சொல்வார்கள். இவர்களை புரிந்துக்கொள்வது சற்று கடினமான விடயமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியை சேர்ந்தவர்கள், எப்போதும் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.அவர்கள் உறவுகளில் சிக்கிக்கொள்ள ஒருபோதும் விரும்புவது கிடையாது.
இதனால் தங்களின் சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்ள ஏராளமாக பொய் சொல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் சாகச உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.பிறரை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, உண்மையை வெளிப்படையாக கூறாமல் சில கட்டுக்கதைகளுடன் கூறுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |