இளகிய மனம் படைத்தவர்கள் இந்த ராசியினர் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை , விசேட குணங்கள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் மற்றவர்களின் துன்பத்தை கண்டு உண்மையாகவே மனம் வருந்துபவர்களாகவும் இருப்பார்கள்
அப்படி மற்றவர்களுக்கு உதவும் இளகிய மனம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் தங்களின் அனைத்து திட்டங்களையும் தனித்துநின்று நிறைவேற்ற கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு இயல்பாகவே மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் இருக்கும். ஏழைகளுக்கு உதவுவது மற்றும் சமூக சேவைகளில் ஈடுபடுவது போன்ற விடங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
இவர்கள் ஒருபோதும் மற்றவர்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொள்ள நினைக்க மாட்டார்கள். கடினமான சூழ்நிலைகளிலும் கூட மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் வித்தியாசமான குணம் கொண்வர்களாக இருப்பார்கள். இவர்களின் நடத்தைகள் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் சற்று மர்மமாக இருக்கும்.
இவர்கள் தங்களின் பிரச்சினைகளையும் உணர்வுகளையும், வெளிக்காட்டிக்கொள்ள விரும்பமாட்டார்கள். ஆனால் மற்றவர்களிள் உணர்வுகளை சொல்லாமலேயே புரிந்துக்கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மனதளவில் மிகவும் மென்மையானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்ற குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்களின் சூழ்நிலை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் இவர்கள் மற்றவர்களை காயப்படுத்தவே மாட்டார்கள்.
இவர்கள் தங்களின் லட்சியங்களை அடைவதில் அதிக கவனம் செலுத்துபவர்களாக இருக்கின்ற போதிலும், சமூக சேவைகளை இவர்கள் புறக்கணிப்பது கிடையாது.
இவர்களிடம் உதவி கேட்பவர்களுக்கு நிச்சயம் எப்படியாவது உதவ வேண்டும் என நினைப்பார்கள். குடும்ப உறவுகளிடத்திலும் சரி மற்றவர்களிடமும் சரி பிறரின் மனம் புண்படாத வகையில் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |