சிங்கம் போல் தைரியத்தின் சின்னமாகவே திகழும் டாப் 3 ராசியினர்! உங்க ராசியும் இதுவா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக அறியப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் தைரிசாலிகளாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். இவர்களை பயப்பட வைப்பது யாராலும் முடியாத காரியமாக இருக்கும்.

அப்படி யாருக்கும் அச்சாமல் மனசாட்சிக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொண்டு சிங்கம் போல் தைரியத்தின் சின்னமாகவே திகழும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் அசாத்திய தைரியம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். தைரியம் மற்றும் வீரத்தின் கிரகமான செவ்வாயின் தாக்கம் இவர்களிடம் தீவிரமாக வெளிப்படுகிறது.
அதன் காரணமாக, இவர்களிடமும் அந்தப் பண்புகள் இயல்பாகவே காணப்படுகின்றன. மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் பதற்றமடையாமல், துணிச்சலுடன் முன்னேறிச் செல்லும் குணம் இவர்களுக்கு உண்டு.
தைரியசாலிகளாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களின் மனதில் இருக்கும் பயத்தையும் போக்கும் ஆற்றல் இவர்களிடம் காணப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தின் அருள் மட்டுமின்றி, இந்த ராசியினருக்கு அனுமன் பெருமானின் சிறப்பான அருளாசியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, இவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
சிம்மம்

கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே அச்சமற்றவர்களாகத் திகழ்கிறார்கள்.
எத்தகைய கடினமான சூழ்நிலை ஏற்பட்டாலும், அதைத் தங்களுடைய சொந்த முயற்சியால் சமாளிக்கும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.
சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக சாகசச் செயல்களில் ஈடுபடுவதைக் காணலாம். அதேபோல், இவர்களிடம் தலைமைத்துவப் பண்புகளும் சிறப்பாகக் இருக்கும்.எனவே, தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் போது அச்சமின்றி செயல்படும் தன்மை இவர்களிடம் இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் வெளித்தோற்றத்தில் அமைதியானவர்களாகத் தோன்றினாலும், அவர்களிடம் துணிச்சலுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை.
தங்களுடைய பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக, எத்தகைய கடினமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருப்பார்கள். இவர்களிடம் துணிச்சலும் அச்சமின்மையும் வெளிப்படையாகவே இருக்கும்.
செவ்வாய் கிரகம் விருச்சிக ராசியின் அதிபதியாகத் திகழ்வதால், இந்த ராசியினர் பல்வேறு சவால்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, தங்களுடைய இலக்குகளை அடைய முயற்சிப்பார்கள்.
இவர்கள் மிகுந்த துணிச்சல் கொண்டவர்களாக இருப்பதுடன், தங்களுடைய கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தின் மூலம் பல்வேறு துறைகளிலும் வெற்றி பெறுகின்றனர்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |