அசைக்க முடியாத மனவலிமை கொண்ட ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட இயல்புகள், நேர்மறை, எதிர்மறை குணங்கள் மற்றும் ஆளுமை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மன உறுதியுடையவர்களாக இருப்பார்கள். இவர்களின் மனவலிமையை யாராலும் குறைக்க முடியாது.
அப்படி கடினமான சூழ்நிலையிலும் தங்களின் மனவலிமையை இழக்காமல் வெற்றியை தனதாக்கிக்கொள்ளும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் லட்சிய வாதிகளாக இருப்பார்கள். சூழ்நிலைகள் குறித்து கவலைப்படாமல் தங்களின் இலக்கை நோக்கி முன்னேறும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்கள் வெற்றிப்பாதையில் உள்ள ஒவ்வொரு தடையையும் தங்களின் படிக்கல்லாக மாற்றி வாழ்வில் உச்சத்துக்கு செல்லும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
வாழ்க்கையில் ஏற்படும் கடினமான சிக்கல்களின் போதும் மனவுறுதியுடன் செயல்பட்டு. தங்களின் அசுர வளர்ச்சியால் எதிரிகளை பிரம்மிக்க வைப்பார்கள்.
இவர்கள் யாருக்காகவும் தங்களின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். இவர்களின் நல்ல செயல்களை இவர்களாகவே பாராட்டிக்கொண்டு முன்னேறுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரத்திற்கும் ஆழமான உணர்ச்சி மையத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இவர்களை அவநம்பிக்கையான வார்தைகளால் வீழ்த்துவது முடியாத காரியமாக இருக்கும்.
இவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை காதில் வாங்கிக்கொண்டு கவலைப்டும் குணம் அற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் கடினமான சூழ்நிலையிலும் தங்களின் தன்னம்பிக்கை,தைரியத்தை கைவிடுவது கிடையாது. யாராலும் இவர்களின் மனவலிமையை குறைக்க முடியாது.
பாதிப்பைத் தழுவுவது மீள்தன்மையை அதிகரிக்கும் என்பதை விருச்சிக ராசியினர் உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஆரம்பத்தில் பரிபூரணவாதிகளாகத் தெரிகிறார்கள், பெரும்பாலும் மற்றவர்கள் கவனிக்காத விவரங்களில் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் உள் விமர்சனங்களை செயல்படுத்தக்கூடிய முன்னேற்றங்களாக மாற்றுவதில் சிறந்து விளங்குவார்கள். தனிப்பட்ட வளர்ச்சி என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறை, ஒரு முறை மட்டுமே தீர்க்கக்கூடியது அல்ல என்பதை அவர்கள் நன்கு உணர்ந்தவர்களாக இருப்பார்டகள்.
இவர்கள் தங்களைத் தாங்களே தொடர்ந்து சரிபார்த்துக் கொள்வதன் மூலமும், தேவைப்படும்போது போக்கை சரிசெய்வதன் மூலமும் வாழ்வில் வெற்றியடைவார்கள். இவர்களிடம் அசாத்திய மனவலிமை இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |