கூந்தல் காடு மாதிரி வளரணுமா? மருத்துவர் கூறும் எளிய வீட்டு வைத்தியம்: வெறும் 2 பொருள் போதும்!
ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பான விடயம் தான்.
ஆனால் தற்காலத்தில் அதிகரித்த சூழல் மாசு, வேலை பளுவால் ஏற்படும் மன அழுத்தம், முறையற்ற உணவுப்பழக்கவழக்கம் என ஏராளமான காரணிகள் கூந்தல் உதிர்வுக்கு காரணமாக அறியப்படுகின்றது.
நாம் முகம் மற்றும் உடல் பராமரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவு கூந்தல் தொடர்பிலும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.
முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தல் முக்கிய இடத்தை பெறுகின்றது.தற்காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வது மிகப்பெரும் பிரச்சினையாகவுள்ளது.
இதற்காக பணத்தையும் நேரத்தையும் அதிகமாக செலவிட்டும் எந்த பயனும் இல்லை என புலம்புபவர்கள் தான் அதிகம்.
அதற்கு திருச்சியை சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெறும் இரண்டே பொருட்களை கொண்டு எவ்வாறு கூந்தல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம் என்பது தொடர்பில் விளக்கியுள்ளார்.
சித்த மருத்துவர் காமராஜ் கொடுத்துள்ள வீட்டு வைத்திய குறிப்பு தொடர்பாக இந்த பதிவில் முழுடையாக காணலாம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை- ஒரு கைப்படியளவு
வெந்தயதம்- அரை கப்பளவு
செய்முறை
முதலில் அரை கப் வெந்தயத்தை நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனையடுத்து கறிவேப்பிலை மற்றும் வெந்தயத்தை சேர்த்து, நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரைத்த பொருட்களை வடைகளாக தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வடை 10 கிராம் அளவுக்கு இருக்குமாறு தட்டிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நிழலில் உலர்த்தி எடுக்க வேண்டும். பின்னர் அந்த வடைகளில் ஒன்றை எடுத்து 200 மில்லி லீட்டர் தேங்காய் எண்ணெயில் 15 நாட்கள் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும்.
பின்னர் அந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால், கூந்தல் உதிர்வு, கூந்தல் வறட்சி, முடி உடைதல் என அனைத்து விதமான கூந்தல் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுத்து நீண்ட அடர்த்தியான கூந்தலை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
