பணத்தை கையாளுவதில் கில்லாடிகள் இந்த 3 ராசிகள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை,விசேட ஆளுமைகள், நிதி நிலை ஆகியவற்றுடன் ஒருவருடைய குணங்களிலும் பெருமளவான தாக்கத்தை கொண்டிருக்கும் என்று நம்பப்படுகின்றது.
ஜோதிட சாஸ்திரத்த்தின் அடிப்படையில் ஒருவர் வாழ்வில் பொருளாதாரத்தில் எந்தளவுக்கு ஸ்திரதன்மையுடன் இருப்பார் என்பதில் குறிப்பாக அவரின் ராசி முக்கிய அங்கம் வகிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்படாகவே பணத்தை சம்பாதிப்பதில் கில்லாடிகளாகவும் கையில் இருக்கும் பணத்தை பல மடங்காக பெருக்கும் வித்தையை கற்றுதேர்ந்தவர்களாகவும் இரு ப்பார்களாம்.
அப்படி12 ராசிகளில் பணத்தை பெருக்கும் வழிகள் குறித்து நன்றாக அறிந்துவைத்திருக்கும் முக்கிய மூன்று ராசிகள் யார் யார் என இந்த பாதிவில் பார்க்கலாம்.
மகரம்

மகர ராசிக்காரர்கள் தங்களின் ஒழுக்கம், தொலைநோக்குப் பார்வை மற்றும் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இயற்கையாகவே சிறந்த நிதி முகாமைத்துவ அறிவு இருக்கும்.
எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவதிலும், விடாமுயற்சியுடன் சேமிப்பதிலும், புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதிலும் இந்த ராசியினரை அடித்துக்கொள்ளவே முடியாது. இவர்கள் எப்போதும் நிதி விடயத்தில் அதி சிறந்த முடிவுகளை எடுப்பார்கள்.
இவர்களின் தனித்துவமான பழக்கங்கள் பொருளாதார ரீதியில் இந்த ராசியினரை எப்போதும் உச்சத்தில் வைக்கும். இவர்கள் கையில் இருக்கும் பணத்தை எப்படி பெருக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்.
ரிஷபம்

அழகு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுபடும் ரிஷப ராசியினர் வாழ்க்கையில் நிலைத்தன்மை மற்றும் ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் கையில் காசு இல்லை என்ற ஒரு நிலை வாழ்விலி் ஒருபோதும் வரவே வராது. இவர்கள் இயவ்பாகவே சுக்கிரன் மற்றும் மகாலட்சுமியின் ஆசியால் பணத்தை ஈர்க்கின்றார்கள். இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்கும் வித்தையை இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
அவர்கள் எப்போதும் பொருள்சார்ந்த பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் பணம் சம்பந்தப்பட்ட முடிவுகளை மிகவும் தெளிவாக எடுக்கின்றார்கள்.
கன்னி

கிரகங்களின் இளவரசனாக அறியப்படும் புதனால் ஆளப்படும் கன்னி ராசிக்காரர் எந்த விடயத்திலும் முழுமையையும், நேர்த்தியையும் விரும்பும் குணம் கொண்டவர்கள். இதனால் இவர்கள் பணவிடயத்திலும் அதே நேர்த்தியை பின்பற்றுகின்றார்கள்.
இவை இரண்டும் பணத்தை சிறப்பாக நிர்வகிக்க தேவைப்படும் அத்தியாவசிய குணங்களாகும். இவர்கள் பணத்தை சரியாக முகாமைத்துவம் செய்வதில் படு கில்லாடிகளாக இருப்பார்கள்.
எந்த துறையில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதையும் இவர்கள் சரியாக அறிந்துவைத்திருப்பார்கள். திட்டமிட்டு பணத்தை செலவு செய்வதிலும் இவர்கள் பெயர் பெற்றவர்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |