இந்த ராசியினர் ஒரு முடிவெடுத்தால் பக்காவா இருக்குமாம்... நீங்களும் இந்த ராசியா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்னை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ரசிகளில் பிறந்தவர்கள் கடினமான சூழ்நிலைகளிலும் சரியான முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி எப்போதும் சூழ்நிலைகளுக்கு கட்டுப்படாது சரியானதை மட்டுமே சிந்தித்து சிறந்த முடிவை எடுக்கும் அறிவாற்றல் மிக்க ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பரிபூரணவாதிகளாக அறியப்படுகின்றார்கள். இவர்கள் எந்த செயலை செய்தாலும் அதில், முழுமையும் நேர்தியும் இருக்க வேண்டும் என்பதில், உறுதியாக இருப்பார்கள்.
அவர்கள் குறைகளைத் தேடிக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அவர்கள் கிட்டத்தட்ட இயற்கைக்கு அப்பாற்பட்டதாக உணரக்கூடிய வகையில் அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் கடினமான சூழ்நிலைகளிலும், உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக சரியான முடிவெடுக்கும் ஆற்றலை இயல்பிலேயே கொண்டிருப்பார்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகளில் தெளிவாக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தங்கள் தீவிர தன்மைக்கு பெயர் பெற்றவர்களாகவும், மர்மமான குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
ஆனால் இவர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.இவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் மிகவும் சரியானதாகவே இருக்கும்.
இவர்கள் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் குறைவாக இருக்கும். அத்துடன் இவர்கள் தங்களின் தனிப்பட்ட விபரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஒருபோதும் விரும்புவது கிடையாது.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு எப்போதும் தொலைநோக்கு பார்வை சற்று அதிகமாகவே இருக்கும். இந்த ராசியினர் எதிர்காலம் குறித்து துல்லியமாக கணித்து முடிவெடுப்பதில் சிறந்த ஆளுமை கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் எடுக்கும் முடிவுகள் பற்றி தாங்கள் பிற்காலத்தில் வருத்தப்பட கூடாது என்ற நோக்கத்தில் எப்போதும் உறுதியாக இருப்பார்கள்.
ஒரு காலக்கெடுவை முடிவு செய்து அதற்குள் தங்களின் இலக்கை அடைவதற்கு எவ்வாறான முடிவுகளை எடுத்தால், வெற்றியடையலாம் என்பது இவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |