மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்த தயங்காத டாப் 3 ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருவரும் நிறம், உயரம், பருமன், தனித்துவ திறமைகள் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருப்பதை போன்றே இவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களும் நபருக்கு நபர் வேறுப்படும்.
ஜோதிட சாஸ்திரதின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் குணங்களில் பெருமளவில் தாக்கத்தை கொண்டிருப்பதாக தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், குறிப்பட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை வார்த்தைகளாலும், தங்களின் செயல்களாலும் காயப்படுத்தவும், வெறுக்கவும் தயங்காதவர்களாக இருப்பார்களாம். அப்படி மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளாமல் காயப்படுத்தும் குணம் கொண்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் எல்லோரும் தங்களை ஏமாற்றி, கைவிடுவார்கள் என்ற எண்ணத்துடன் மற்றவர்களுடன் பழகுவதால் இவர்கள் எப்போதும் மற்றவர்களை தங்களை காயப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் மற்றவர்ளை காயப்படுத்திவிடுகின்றார்கள்.
விருச்சிக ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, நீங்கள் நம்பகமானவர் என்பதை அவர்களுக்கு நிரூபித்தால் மட்டுமே இவர்கள் நெருங்கி பழகுவார்கள்.
பெரும்பாலான நேரங்களில் இவர்களால் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துக்காள்ள முடிவதில்லை. இதனால் பல சமங்களில் இவர்களால் மற்றவர்களின் மனம் நோகக்கூடும்.
மகரம்

மகர ராசிக்காரர்கள், தங்களுக்கு அதிக எதிர்ப்பு வரும்போதும், மற்றவர்கள் தங்கள் நிபுணத்துவத்தைக் கேள்வி கேட்கும்போதும் மற்றவர்களை வெறுக்கவும்,காயப்படுத்தவும் தயங்கவே மாட்டார்கள்.
மகர ராசிக்காரர்களுக்குத் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியும், எனவே ஒவ்வொரு அடியிலும் அவர்கள் கண்காணிக்கப்பட வேண்டியதில்லை என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள்.
அவர்கள் மிகவும் நம்பகமான மற்றும் கடினமாக உழைக்கும் ராசிக்காரர்களாக இருப்பதால், இவர்களை கேள்வி கேட்டு தொந்தரவு செய்பவர்களை இவர்கள் சிந்திக்காமல் காயப்படுத்தும் வகையில் பேசிவிடுவார்கள்.
கன்னி

கன்னி ராசிக்காரர்கள், தாங்கள் விரும்பும் விதத்தில் நடந்துகொள்ளாத, பிறரைப் பற்றிக் கவலைப்படாதவர்களை நேரடியாகவே தங்களின் வார்த்தைகளாலும், நடத்தையாலும் வெறுக்கின்றார்கள்.
தேவைப்படும்போது அவர்கள் தீவிரமாக இல்லாவிட்டாலோ, அல்லது கன்னி ராசிக்காரர்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும்போதும், மற்றவர்கள் ஒத்துழைக்காவிடடாலோ இவர்கள் சற்றும் சிந்திக்காமல் மற்றவர்களின் மனம் நோகும்படி பேசிவிடுவார்கள்.
இவர்களை போலவே மற்றவர்களும் நேர்த்தியாகவும் முழுமையாகவும் ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என்று இவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். அது நடக்காத போது பிறரை வெறுக்கின்றார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |