கொளுத்தி போடுவதில் இந்த ராசியினர் படு கில்லாடிகளாம்.. இவர்களிடம் ஜாக்கிரதை!
ஜோதிட சஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல், திருமணம்,தெழில், விசேட திறமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிட்ப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இரு தரப்பினருக்கு இடையில் சண்டையை ஏற்படுத்தும் வகையில் பேசுவதில் கில்லாடிகளாக இருப்பார்களாம்.

அப்படி எதை சொல்லவே கூடாதோ அதை நாசூக்காக கொளுத்தி போட்டு மற்றவர்களுக்கு இடையில் சண்டையே ஏற்படுத்திவிட்டு, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

இந்த ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்குக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்களாம். இவர்கள் தங்களை பற்றிய விடயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள பெரிதும் விரும்ப மாட்டார்கள்.
ஆனால் மற்றவர்களின் வாழ்க்கையில் நடக்கும் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் முழுடையாக அறிந்து வைத்திருப்பார்களாம்.
இரு தமரப்பினருக்கு மத்தியில் எந்த விடயங்களை சொன்னால் இருவருக்கும் இடையில் முறக்பாடு கிளம்புமோ குறிவைத்து அதையே போட்டுடைப்பதில் இவர்களை மிஞ்ச ஆளே இல்லையாம். விவாதத்தை கிளப்பிவிடுட்டு வேடிக்கை பார்க்கும் குணம் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.
தனுசு

பிறப்பிலேயே சுதந்திர இயல்புக்கும் சாகச தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக திகழும் தனுசு ராசியினர் எதை எங்கே பேச வேண்டும் என்பதை அறியாதவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் அதீத வெளிப்படை தன்மை காரணமாக எதை எங்கே பேச வேண்டும் என்ற தெளிவு இல்லாம் பேசி மற்றவர்கள் மத்தியில் சண்டை உருவாக காணமாகிடுவார்களாம்.
இவர்கள் உண்மையில் சண்டை வர வேண்டும் என்ற நோக்கத்தில் எதையும் செய்யாத போதும் இவர்களின் விளையாட்டுத்தனமாக குணம் மற்றும் பொறுப்புணர்வற்ற நடத்தையால் மற்றவர்களி் பிரிவுக்கும் கூட காரணமாகிவிடுவார்கள்.
கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் எந்த விடயத்திலும் மிகுந்த நேர்த்தியையும், முழுமையையும் விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களை தேடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இரு தரப்பினருக்கு இடையில் தெரிந்தே சண்டையை கிளப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் மகிழ்ச்சியடையும் குணம் கொண்டவர்களாம். இவர்கள் இரு தரப்பினர் குறித்தும் நன்கு அறிந்த பின்னரே செயலில் இறங்குவார்களாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |