இந்த ராசி பெண்கள் சிறந்த அம்மாவாக இருப்பார்கள்... யார் யார்னு தெரியுமா?
எல்லா அம்மாக்களுக்கும் தங்கள் குழந்தைகளை பிடிக்கும். எல்லா அம்மாக்களுமே தங்கள் குழந்தையை அன்பாகப் பராமரிப்பார்கள். தங்கள் குழந்தையுடன் நேரம் செலவழிக்க விரும்புவார்கள்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியை சேர்ந்த பெண்கள் அம்மா என்ற மகத்துவமான ஸ்தானத்தை பெற்றதன் பின்னர் தங்களின் குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
வாழ்வில் எத்தனை போராட்டங்களை வந்தாலும் அனைத்தையும் தனியாக நின்று சந்திக்கும் திறமை கொண்டவர்களாகவும் தங்களின் குழந்தையை எந்த துன்பமும் நெருங்காமல் காப்பாற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.
அப்படிப்பட்ட ராசியை சேர்ந்த பெண்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் லட்சிய வாதிகளாக இருப்பார்கள்.இவர்கள் எப்போதும் தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.
குழந்தைகள் விடயத்தில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் குழந்தைகளுக்காக நேரம் செலவிட தவறவே மாட்டார்கள்.
ரிஷபம்
இந்த ராசியில் பிறந்த பெண்கள் பொறுமைக்கு பெயர் பெற்றவர்கள்.இவர்கள் இலகுவில் கோபம் அடைய மாட்டார்கள். ஆனால் கோபம் வந்துவிட்டால் யாராலும் அவர்களை சமாதானப்படுத்தவே முடியாது.
வாழ்வில் எத்தனை இடையூறுகள் வந்தாலும், குழந்தைகளை சிறப்பாக வளர்ப்பார்கள். இவர்கள் பொறுமையின் காரணமாக வாழ்வில் பல வெற்றிகளை அடைவார்கள்.
துலாம்
துலா ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் அன்பானவர்கள். இந்த ராசியினர் தாயாக இருந்தால் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்.
இவர்கள் குழந்தைகள் தவறு செய்யும் பட்சத்திலும் கூட பொறுமையாகவும் அன்பாகவும் அவர்களின் தவறுகளை எடுத்துக்கூறி திருத்தும் தன்மை கொண்டவர்கள்.
மகரம்
மகர ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் குழந்தைகளின் மீது தீவிரமான பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். தந்தையின் இடத்தையும் கூட இவர்களே நிரப்பிவிடும் அளவுக்கு மிகுந்த அக்கறையுடன் இருப்பார்கள்.
மீனம்
இந்த ராசியில் பிறந்த பெண்கள் கலை ஆர்வம் கொண்டவர்கள். அதே நேரம் குழந்தைகள் விடயத்தில் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காக எந்த துன்பத்தையும் தாங்கிக்ககொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |