மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்ளும் ராசிகள்.. இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க
பொதுவாக மனிதாபிமானம் மனிதர்களாக பிறந்த அனைவரிடமும் இருக்க வேண்டிய குணங்களில் ஒன்று.
இந்த குணம் இருப்பவர்கள் ஒருவரின் உணர்வுகளையும், தேவைகளையும் புரிந்துகொண்டு நடந்து கொள்வார்கள்.
இந்த குணம் அதிகம் கொண்டவர்களை பார்ப்பது அரிது. குறைந்தபட்சம் மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்க மனிதாபிமானம் அவசியம் எனக் கூறப்படுகிறது.
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் தான் இந்த குணம் இருக்கும். மனிதாபிமானம் நபருக்கு நபர் மாறுபடும்.
அந்த வகையில், மனிதாபிமானம் குறைவாக இருக்கும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
மனிதாபிமானம் இல்லாத ராசிகள்
மேஷம் | மேஷ ராசியில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் சுயநலவாதிகளாக இருப்பார்கள். கிரகங்களின் தளபதி மற்றும் போரின் கிரகமான செவ்வாயால் ஆளப்படுவார்கள். சில சமயங்களில் மற்றவர்களை புரிந்து கொள்ளாது நடந்து கொள்வார்கள். சொந்த வேலைகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் மனிதாபிமானம் உள்ளவர்களாகவே இருந்தாலும், உணர்ச்சிரீதியாக மற்றொருவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளமாட்டார்கள். |
சிம்மம் | சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதிக பற்று கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்குள் இருக்கும் ஈகோ மற்றவர்களுடன் சரியாக பேச விடாது. சொந்த நலனைத் தாண்டி மனிதாபிமானத்துடன் சிந்திக்க மாட்டார்கள். வலுவான சிந்தனை மற்றும் கவனம் அவர்களின் தேவைகளில் மாத்திரம் கவனம் செலுத்த வைக்கும். |
மிதுனம் | மிதுன ராசியில் பிறந்தவர்கள் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பார்கள். தகவல் தொடர்பு மற்றும் புத்திக்கூர்மையின் கிரகமான புதனால் ஆளப்படுவார்கள். சில சமயங்களில் மனிதாபிமானத்தை விட அறிவுசார் புரிதலுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாது தன்னிச்சையாக முடிவெடுப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள் உண்மையான அக்கறை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
